டுனீஷியாவில் துளிர் விட்ட இஸ்லாமியப் போக்கு ஜனநாயகத்துக்கு சாவு மணி அடித்த சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு இராச்சியமும் லத்தீப் பாரூக்

Spread the love

மீண்டும் ஒரு தடவை உலகில் துளிர் விட்ட இஸ்லாமியப் போக்கு ஜனநாயகத்துக்கு சாவு மணி அடிக்கப்படடுள்ளது. இந்த முறை அது அரபு வசந்தம் ஊற்றெடுத்த டுனிஷீயாவில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் அங்கு மீண்டும் ஒரு சர்வாதிகாரத்துக்கு வழியமைக்கப்பட்டுள்ளது. இது வரை வெளியாகி உள்ள தகவல்களின் படி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் வடிவமைப்பில் சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு இராச்சியமுமே இந்த சர்வாதிகாரத்துக்கான சதிப் புரட்சியின் பின்னணியில் இருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த ஜுலை 25 ஞாயிற்றுக்கிழமை அன்று டுனிஷியா ஜனாதிபதி காயிஸ் செய்யித் அவசர கால சட்டங்களை அமுலுக்கு கொண்டு வந்துள்ளார். பிரதமர் பதவி நீக்கம் செய்யப்படடுள்ளார். பாராளுமன்றம் 30 தினங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. புதிய பிரதமர் ஒருவரை நியமித்து ஆட்சியைத் தொடரப் போவதாக அறிவித்தார்.

2011 அரபு வசந்தப் போராட்டங்கள் வெற்றிகரமாக ஊற்றெடுத்த டுனீஷியாவில் அப்படி என்ன தான் நடந்தது என்பதை உலகம் ஆச்சரியத்தோடு நோக்குகின்றது. அதுவும் 2019ல் சுதந்திரமான தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி காயிஸ் செய்யித் இதைச் செய்துள்ளமை வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

இப்போது அங்கே அச்சம் சூழ்நதுள்ளது. எகிப்தில் ஏற்பட்டது போல் ஜனநாயகக் கட்டமைப்புக்களை அடியோடு தகர்த்து இராணுவ சர்வாதிகாரம் தோற்றுவிக்கப்படுமா என்ற ஒரு அச்ச நிலை உருவாகி உள்ளது. எகிப்தில் இஸ்லாமியப் போக்கு ஜனநாயக தலைவர் முஹம்மத் முர்ஷியின் ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்க மற்றும் இஸ்ரேல் வடிவமைத்துக் கொடுத்த திட்டத்தை அமுல் செய்து இராணுவ சர்வாதிகாரி அப்துல் பத்தாஹ் அல் சிசியை ஆட்சியில் அமர்த்த சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் என்பன இணைந்து 11 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டமை இங்கு நினைவூட்டத் தக்கது.
டுனீஷியாவில் 2019ல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிர்பாராத விதமாக வெற்றி;யீட்டியவர்தான் காயிஸ் செய்யித். அவர் ஒரு அரசியல் யாப்பு சட்டத்துறை பேராசிரியர். எந்தவொரு அரசியல் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. எந்த ஒரு அரசியல் சித்தாந்தத்துக்கு உரியவரும் அல்ல.

டுனீஷியாவில் ஆளும் கட்சியாக இருந்த என்னஹாதா கட்சியை பதவியில் இருந்து அகற்ற சவூதி அரேபியாவும் அமீரகமும் நீண்ட காலமாகப் பாடுபட்டு வருகின்றன. காரணம் இந்தக் கட்சி இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடன் தொடர்புடையது. அரபு உலகில் எந்தவொரு இடத்திலும் துடிப்புள்ள ஜனநாயக முறை அமுலுக்கு வந்து விடக் கூடாது என்பதை பிரதான இலக்காகக் கொண்டு சவூதி அரேபியாவும் அமீரகமும் முனைப்போடு செயலாற்றி வருகின்றன. அதிலும் குறிப்பாக எந்த ஒரு அரபுநாட்டிலும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புக்கு ஆதரவான சக்திகள் தேர்தல் வெற்றிகளை ஈட்டிவிடக் கூடாது என்பதில் அவை பெரும் கவனம் செலுத்தி வருகின்றன.

பலஸ்தீனம் உற்பட அரபு உலகம் முழுவதும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புக்கு எதிரான போராட்டத்துக்கு ஐக்கிய அரபு அமீரகமே தற்போது தலைமை தாங்கி வருகின்றது. உதாரணத்துக்கு அமீரகத்தின் கைக்கூலிகளில் ஒருவரான பலஸ்தீன பத்தாஹ் அமைப்பின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான மொஹம்மத் தஹ்லான் என்பவர் அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பென் செய்யித்தின் நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றி வருகின்றார்.

தேவையான அளவு நிதிகளை வழங்கி தனது அரசுகளின் நேரடியான தலையீட்டின் மூலம் டுனீஷியாவில் பண்டைய அரசை நிறுவுவதில் சவூதியும் அமீரகமும் முனைப்புடன் பணியாற்றி வந்தன. மேற்குலக ஆதரவுடன் கூடிய இந்த வளைகுடா கூட்டணி இஸ்லாமும் ஜனநாயகமும் அங்கே மீண்டும் துளிர்விடுவதை இப்போது தடுத்துள்ளன.

இஸ்லாமிய சகோதரத்துவ அமைபபுக்கு ஆதரவான சக்திகளையும், ஜனநாயக ஆதரவு செயற்பாடுகளை முறியடிப்பதிலும் அமீPரகத்துக்கு சிறப்பான பங்களிப்பு உண்டு. லிபியா, எகிப்து, பஹ்ரேன், சூடான் மற்றும் யெமன் ஆகிய நாடுகளை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

பத்தி எழுத்தாளர் கலாநிதி அமீரா அபு அல் பத்தோஹ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். டுனீஷியாவில் ஜனாதிபதி மேற்கொண்ட சதி அரபு சமூகத்துக்குள் ஜனநாயத்தையும் சுதந்திரத்தையும் வேண்டி நிற்கும் தரப்பினர் மத்தியில் ஒரு பெரும் வெடிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அரபு வசந்தத்தின் தொட்டிலான டுனீஷியாவில் ஏற்பட்ட மல்லிகைப் புரட்சியில் இருந்து அதன் வாசத்தை அவர்கள் நுகரத் தொடங்கினர். சிரியா, எகிப்து. யெமன், லிபியா ஆகிய நாடுகளுக்கு டுனீஷியா நம்பிக்கையை அளித்தது. இருந்தாலும் அது பிராந்திய பிரச்சினைகளில் முடிவடைந்தது.

அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் இஸ்ரேலின் மொஸாட்டின் வழிகாட்டலில் அபு தாபியில் நிலைகொண்டு புரட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டன. அரபு உலகின் ஜனநாயக மாதிரியாக டுனீஷியா உருவெடுப்பதை அவர்கள் விரும்பவில்லை. அதனால் அதை முளையிலேயே கிள்ளி எறிந்தனர். சுதந்திரத்துக்கான தாகமும் ஆர்வமும் தமது மக்கள் மத்தியிலும் பரவி அது தமது சிம்மாசனங்களை ஆட்டம் காணச் செய்து விடலாம் என அவர்கள் அச்சம் கொண்டனர். இதனால் தான் அவர்கள் தமது பண பலத்தைக் கொண்டு அரபு வசந்தத்தை அடக்கினர். இதனால் தான் அரபு உலகில் கொந்தளிப்பும் அமைதி இன்மையும் உருவானது. ஆனால் மக்களோ அரபு வசந்தத்தின் மூலம் உண்மையில் கிளர்ந்து எழுந்தது தமது கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு எதிராக மட்டுமே.

மேற்குலக கட்டாயத்தின் கீழ் மக்கள் அச்சநிலைக்கு கொண்டு வரப்பட்டு அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர். இந்த விடயத்தில் ஏனைய அரபு உலக நாடுகளுக்கு சவூதி அரேபியாவும் அமீரகமும் முன் உதாரணங்களாகத் திகழ்ந்தன. அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக யாராவது குரல் கொடுத்தால் அதன் முடிவு சர்வாதிகரமும் அழிவுமாத்தான் இருக்கும் என்ற நிலை உருவாக்கப்பட்டது.

டுனீஷியா இந்த விதி முறையில் இருந்து தப்பியதுபோல்தோன்றலாம். ஆனால் அபுதாபியிலும் றியாத்திலும் செயற்பட்ட புரட்சிக்கு எதிரான சக்திகள் ஒரு அரபுநாட்டில் ஜனநாயகம் மீண்டும் துளிர் விடுவதை அனுமதிக்கவில்லை. அவர்கள் டுனீஷியா மக்கள் மத்தியில் தொடர்ந்து தேசத்துரோகம் என்ற நச்சு விதையைத் தூவிக் கொண்டே இருந்தனர். அரசியல்வாதிகளையும் ஊடகங்களையும் அவர்கள் தமது பண பலத்தைப் பயன்படுத்தி வளைத்துப் போட்டனர். புரட்சி மூலம் அங்கு உருவாக்கப்பட்ட ஜனநாயகத்தை மக்களே சபிக்கும் வகையில் அவர்கள் பிரசாரங்களை முன்னெடுத்தனர். நாடு சர்வாதிகரத்துக்கு மீண்டும் திரும்பும் வரை அங்கு ஸ்திரமற்ற நிலை இருக்க வேண்டும் என்பது தான் அவர்கள் வகுத்த பிரதான திட்டம்.
அமீரகம் தனது பங்கிற்கு டுனீஷியாவில் சதிப் புரட்சி ஒன்றை அரங்கேற்ற பல தடவைகள் முயன்றது. ஆனால் இதுவரை அவை வெற்றி அளிக்கவில்லை. ஆனால் இப்போது அதற்கு ஏதுவாக அரசியல் உலகுக்கு அப்பால் இருந்து வந்த ஜனாதிபதி கயிஸ் செய்யித் கிடைத்துள்ளார். அவர் ஒரு அரசியல்சாசன சட்டப் பேராசிரியர் என்பதை விட அரசியல் ரீதியான இந்த நம்பத்தன்மையும் அற்றவர். அவரை டுனீஷியா மக்கள் தெரிவு செய்யவும் அதுவே காரணமாக இருந்திருக்கலாம். விஷேடமாக ஏமாற்றுக்கார அரசியல்வாதிகளால் தொடர்ந்து ஏமாற்றப்பட்ட இளைஞர்கள் அந்த ஏமாற்றுப் பேர்வழிகளால் நாடு சுரண்டப்பட்ட நிலையில் வெறுப்பு வேதனை என்பனவற்றின் உச்சத்தில் இருந்தனர். இவற்றின் விளைவுதான் காயிஸின் தெரிவு.
அவரின் வெற்றி டுனீஷியா அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமீரகம் ஒரு வேற்பாளரை களமிறக்கி அவருக்கு ஆதரவாக கோடிக்கணக்கான டொலர்களை செலவிட்டது. ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இந்தத் தோல்வியை அமீரகத்தின் ஆட்சியாளரால் ஏற்றுக் கொள்ள முடியவும் இல்லை. அதனால் அவர் தொடர்ந்து சதிப் புரட்சியை தூண்டி வந்தார். கடைசியில் அவரது முயற்சி மக்களால் தெரிவு செய்யப்பட்ட டுனீஷியா ஜனாதிபதியாலேயே சாத்தியமாகி உள்ளது.

அவர் ஒரே நாளில் அரசியல் சாசனத்தை மீறி உள்ளார். ஜனநாயக முறையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி தன்னை தெரிவு தெரிவு செய்த ஜனநாயக மரபையே தூக்கி எறிந்துள்ளார். டுனீஷியாவை அவர் தனது எஜமானர்களின் விருப்பத்தின் கீழ் சர்வாதிகார ஆட்சிமுறைக்கு கொண்டு வந்துள்ளார். இராணுவச் சட்டங்களும் அங்கே அமுலுக்கு வந்துள்ளன. பாராளுமன்றத்துக்கு வெளியே மக்கள் கூடி ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை பொலிஸார் தடுத்துள்ளனர். (முற்றும்)

Post Disclaimer

Disclaimer: டுனீஷியாவில் துளிர் விட்ட இஸ்லாமியப் போக்கு ஜனநாயகத்துக்கு சாவு மணி அடித்த சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு இராச்சியமும் லத்தீப் பாரூக் - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect www.globalmuslimscenario.com/ point-of-view

Post Disclaimer |

IMPORTANT : All content hosted on globalmuslimscenario.com is solely for non-commercial purposes and with the permission of original copyright holders. Any other use of the hosted content, such as for financial gain, requires express approval from the copyright owners.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *