இதுநடந்தது 1947 நவம்பர் 29ல் பலஸ்தீனத்தைபிரித்துயூதநாட்டைஉருவாக்கஐக்கியநாடுகள் சபை தீர்மானம் நிறைவேற்றியபோது
லத்தீப் பாரூக்
இஸ்ரேல் என்றயூதநாடுபலஸ்தீனமக்களின் பூர்வீகபூமியில் 1947ல் ஸ்தாபிக்கப்பட்டது.மத்தியகிழக்கிலும் அதற்குஅப்பாலும் இன்றுஉலகில் இடம்பெற்றுவரும் மோதல்கள்,யுத்தங்கள், இரத்தக்களரிகள், ஸ்திரமற்றநிலை,அமதியீனம் எனஎல்லாவற்றுக்கும் மூல காரணமாகஅமைந்துள்ளது இந்தநாடுதான்.
1930களின்; ஆரம்பம் முதல் உலகில் நிரந்தரஎல்லைகள் அற்றஒருநாடாக,படுகொலைகளைப் புரிந்து,அண்டைநாடுகளைஆக்கிரமித்த,பலஸ்தீனபூமியைஅதிகம் அதிகமாகபறித்தெடுத்த,பலஸ்தீனமக்களைமிகக் கொடுமையானஅடக்குமுறைக்குஆளாக்கிய,காஸா பிரதேசத்தைகிட்டத்தட்டதிறந்தவெளிசிறைச்சாலையாகமாற்றிய, சுவாசிப்பதற்கானகாற்றைத் தவிரமற்றஎல்லாவற்றையும் அந்தமக்களுக்குத் தடைசெய்த இஸ்ரேல் இன்றும் அதன் குற்றச் செயல்களைதொடர்ந்துகொண்டேவருகின்றது.
இஸ்ரேலின் வரலாறைதேடிப் பார்க்கின்றபோதுகடந்த நூற்றாண்டின் திருப்பத்தில் துருக்கிப் பேரரசின் கட்டுப்பாட்டில் பலஸ்தீனமாக இருந்ததுதான் இன்று இஸ்ரேலாகமாறிஉள்ளதுஎன்பதை இலகுவாகஅவதானிக்கலாம். 1896ல் 95 வீதமானமக்கள் இங்குஅரபிகளாகவேகாணப்பட்டனர். 90 வீதமானநிலங்களும் அவர்களிடம் தான் இருந்தது. அதுமிகவும் அமதியானசமாதானமானஒருபூமியாகவே இருந்தது. அங்குமக்கள் சத்தம்போட்டுபேசக் கூட மாட்டார்கள். மோசமானவார்த்தைகள் என்றபேசசுக்கேஅங்கு இடமி;ல்லை.
1897ம் ஆண்டுசுவிட்ஸர்லாந்தின் பெஸல் நகரில் இடம்பெற்றமுதலாவதுஉலகசியோனிஸ காங்கிரஸில் தான் பலஸ்தீனபூமியில் இஸ்ரேலை ஸ்தாபிக்கவேண்டும் என்றதீர்மானம் எடுக்கப்பட்டது. புத்தாண்டுகள் கழித்து 1907ல்லண்டன் காலணித்துவமாநாட்டில் மத்தியகிழக்கைகொந்தளிப்பில் வைத்திருக்கக் கூடியஒருஆதிக்கசக்தியைஉருவாக்கபிரிட்டன் தீர்மானித்தது.
இந்த இரண்டுதீர்மானங்களுக்கும் இடையில் உள்ளபொதுவானசதித் திட்டத்தின் கீழ் தான் யூதசக்திகளும் பிரிட்டனும் ஒன்றிணைந்தன. அவை இரண்டும் சேர்ந்துவகுத்தசதித் திட்டத்தின் விளைவாகத் தான் முதலாவதுஉலகமகாயுத்தத்தின் போதுதுருக்கியப் பேரரசுவீழ்த்தப்பட்டது. அதன் பிறகுஏற்கனவேதிட்டமிட்டிருந்தபடி 1917ல் இந்தப் பகுதியில் ஆதிக்கத்தைக் கொண்டிருந்தபிரிட்டன் யூதகுடியேற்றத்துக்குவழியதை;தது. விஷேடமாக ரஷ்யாவில் உள்ளயூதர்கள் இங்குள்ளபலஸ்தீனப் பகுதிகளுக்குஅழைத்துவரப்பட்டுகுடியேற்றப்பட்டனர்.
பிரிட்டிஷ் மற்றும் யூதசக்திகளின் சதித்
திட்டத்தைஅறிந்திராதநிராயுதபாணிகளானபலஸ்தீனமக்கள் சதிகாரர்கள் எதிர்ப்பார்த்தபடி இதைஎதிர்க்கஆரம்பித்தனர். அதன் முடிவுசட்டவிரோதமாகக் குடியேறவந்தயூதர்கள் தமக்கிடையில் ஹகானா, ஸ்டேர்ன், இர்குன்,சவாய் லுயுமிபோன்றபயங்கரவாதக் குழுக்களைஉருவாக்கிக் கொண்டனர். மெனாச்சம் பெகின், இட்ஷாக் ஷாமிர்,ஏரியல் ஷரோன் அகியோர் இந்தபயங்கரவாதகுழுக்களின்ஞானத் தந்தைகளாகச் செயல்பட்டு இஸ்ரேலியபயங்கரவாதத்தின் மூலவேர்களாகத் திகழ்ந்தனர். பலஸ்தீனக் கிராமங்கள் ஒன்றைக் கூட விட்டுவைக்காமல் இந்தக் குழுக்கள் வேட்டையாடின. மேலேகுறிப்பிட்ட இந்த மூவரும் பிற்காலத்தில் இஸ்ரேலின் பிரதமர்களாகத் தெரிவுசெய்யப்பட்டனர்என்பதுதான் அந்தநாட்டின் கேவலமான இரத்தக்கறைபடிந்தவரலாறாகும்.
பலஸ்தீனமக்களின் எதிர்ப்;பைநிர்மூலமாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டமெனாச்சம் பெகினின் குழுவினர்கொலைவெறியைகட்டவிழ்த்துவிட்டனர்.
நூற்றுக்கணக்கானபலஸ்தீனஆண்களையும். பெண்களையும் சிறுவர்களையும் அவர்கள் கொன்றுகுவித்தனர். ஜெரூஸலத்தில் இருந்துசற்றுதொலைவில் உள்ளடேர்யாஸின் என்றகிராமத்தில் மட்டும் 254 பேர்கொன்றுகுவிக்கப்பட்டனர். அன்றையகாலப்பகுதியில் மனித இனத்துக்குஎதிரானமிகமோசமானபடுகொலைகளாக இந்தச் சம்பவமேஅமைந்திருந்தது. வியட்னாமில் இடம்பெற்றவெற்கக் கேடான“வியட்நாமின் மைலாய் படுகொலைகள்”சம்பவத்தோடுஒப்பிடும் வகையில் இது அமைந்திருந்தது.
ஏந்தவிதமானஉதவிகளும் அற்றநிலையிலும் பலஸ்தீனர்களின் எதிர்ப்புகள் வலுவடைந்தன. பிரிட்டிஷ் அதிகாரபீடம் அதை இரும்புக் கரம் கொண்டுநசுக்கியது. இந்தஎதிர்ப்புஎச்சரிக்கைமட்டத்தைஅடைந்தபோதுபிரிட்டிஷ் ராஜ்ஜியம் அதன் அரபுக் கைகூலிகளானபழமைவாத இராணுவசர்வாதிகாரிகளைப் பயன்படுத்தியது.
1946 முதல் 2000 வரைபலஸ்தீனமக்கள் எவ்வாறுதமதுதாயகபூமியை இழந்துள்ளனர்என்பதை இந்தவரைபடம் சித்தரிக்கின்றது.
அரபுசர்வாதிகாரத்துடன் கூடியபிரிட்டிஷ் அரசின் பின்புலத்துடனானயூதபயங்கரவாதத்துக்குமுகம் கொடுக்கமுடியாதபலஸ்தீனமக்கள் தமதுஉயிரைக் கையில் பிடித்வாறுஓட்டம் பிடித்தனர். அந்தஓட்டம் அவர்களைஅண்டைநாடுகளின்அகதிமுகாம்களுக்குள் முடக்கியது.மிகமோசமானநிலைமைகளின் கீழ் இந்ததஞ்சம் இன்னமும் நீடிக்கின்றது. அதன் பிறகுதேவையானஅளவுயூதர்கள் உலகம் முழுவதிலும் இருந்துமேலதிகமாக இந்தப் பகுதிக்குகொண்டுவரப்பட்டனர். அதன் பிறகுதான் பலஸ்தீனத்துக்குள் யூதநாட்டை ஸ்தாபிக்கும் திட்டம் ஐக்கியநாடுகள் சபையில் முன் வைக்கப்பட்டது.
அமெரிக்கஉயர்மட்டஅதிகாரிகளால் எச்சரிக்கைவிடுக்கப்பட்டபோதும் கூட அதைபொருட்படுத்தாமல் ஜனாதிபதி ட்ரூமனால் அச்சுறுத்தப்பட்டஐக்கியநாடுகள் சபை 1947 நவம்பர் 29ல்எங்கிருந்தோகொண்டுவரப்பட்டயூதர்களுக்காகபலஸ்தீனமக்களின் தாயகத்தில் ஒருதேசத்தைஉருவாக்கும் விதமாகபலஸ்தீனபூமியை கூறு போடும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்துபலஸ்தீனமக்களின் காணிகளை சூறையாடும் உரிமையூதர்களுக்குக் கிடைத்தது. யூதர்களுக்காகஉருவாக்கப்பட்டதேசமாக இருந்தாலும் கூட அங்குஅரபுயூதர்களின் அதாவதுஅரபுமொழிபேசும் யூதர்களின் எண்ணிக்கையேஅதிகமாகக் காணப்பட்டது. அன்றையமொத்தயூதசனத்தொகையான1இ008இ900இல்509இ780ஆகக் காணப்பட்டது.
சியோனிஸ படுகொலைகளின் நடுவே 1948 மேமாதம் 14ம் திகதி இஸ்ரேல் என்றநாடு ஸ்தாபிக்கப்பட்டுபிரகடனம் செய்யப்பட்டது. பலஸ்தீனமக்களின் தாயகபூமியில் இருந்துஐக்கியநாடுகள் தீர்மானத்தின் மூலம் சியோனிஸ யூதர்களுக்குஒதுக்கப்பட்டநிலப்பிரப்பிலும் பார்க்கபலமடங்குஅதிகமானநிரப்பரப்புஅப்போதே இணைத்துக் கொள்ளப்பட்டது.
மனிதாபிமானமற்றபடைப்பிரிவுஒன்றிற்கானஆரம்பமாகஅதுஅமைந்தது. ஐக்கியநாடுகள் சாசனத்தின் அடிப்படைக் கொள்கைகளைமுற்றிலும் மீறும் வகயில் அதுஅமைந்திருந்தது. பிரபஞ்சரீதியானமனிதஉரிமைப் பிரகடனத்தைஅதுமுற்றுமுழுதாகமீறியது. இவ்வாறுசகலமரபுகளையும் உரிமைகளையும் மீறிநிறைவேற்றப்பட்டஒருதீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இஸ்ரேல் இன்றுதன்னைஒரு
இறைமைஉள்ளநாடாகஉரிமைபாராட்டுவதுவேடிக்கையானதாகும்.யூதநாடுபிரகடனம் செய்யப்பட்டு 15 நிமிடங்களில் வெள்ளைமாளிகையில் இருந்தும் கிரம்ளின் மாளிகையில் இருந்தும் அதற்கானஅங்கீகாரம் வழங்கப்பட்டது. இஸ்ரேலைஉருவாக்குவதில் அவை இரண்டும் தான் பின்னணியில் செயல்பட்டுள்ளனஎன்பதைஉலகுக்குபறைசாற்றும் வகையில் இந்தஅறிவிப்புஅமைந்தது.
அன்றுமுதல் மத்தியகிழக்கைஅடுத்தடுத்தஆக்கிரமிப்புக்கள் மற்றும் படுகொலைகள் மூலம் இஸ்ரேல் ஒருகொலைகளமாகமாற்றியது. 1956ல் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் என்பனவற்றின் ஒத்துழைப்போடுஎகிப்தின் ஒருபகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. 1967ல் தென் லெபனான்,காஸா,சினாய் ஆகியபகுதிகளைஆக்கிரமித்தது. அதன் தொடராகமேற்குக் கரை,கோலான் குன்று,கிழக்கு ஜெரூஸலம் ஏன்பனவற்றையும்
தனதுநெருங்கியநண்பர்களானஅமெரிக்காமற்றும் ஐரோப்பாஆகியவற்றின் துணையோடு இஸ்ரேல் ஆக்கிரமித்தது.
அதன் பிறகு இஸ்ரேல் தொடர்பாகஐக்கியநாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டதீர்மானங்கள் யாவற்றையும் இஸ்ரேல் அப்பட்டமாகமீறிஉள்ளது.அந்தவகையில் உலகிலேயேமிகவும் கண்டனத்துக்குஉள்ளானஒருநாடாகவும் அதுதிகழ்கின்றது. ஐக்கியநாடுகள் சபையால் நியமிக்கப்பட்டஒருகுழுவே இஸ்ரேல் யுத்தக் குற்றங்களைப்
புரிந்தஒருநாடுஎன்றமுடிவுக்குவந்துள்ளது. ஆனால் இஸ்ரேல் மீதுஎந்தத் தடைகளையும் ஐக்கியநாடுகள் சபைக் கொண்டுவந்ததாகவரலாறேகிடையாது. ஈராக்,லிபியா,ஈரான் போன் நாடுகள் விடயத்தில் இந்தநிலைப்பாடுமுற்றிலும் மாறுபட்டுள்ளது.
அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் பகிரங்கஆதரவோடு இஸ்ரேல் தனதுகுற்றங்களைப் புரிந்துவருகின்றது. அமைதியற்றநிலையைஉலகில் நீடித்துவருகின்றது.
மனிதஉரிமை,சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் என்பனவற்றின் காவலர்களாகதங்களைக் காட்டிக் கொள்ளும் அமெரிக்காவும் ஐரோப்பாவும் மத்தியகிழக்குவிடயத்தில் மட்டும் வெற்கக் கேடானவிதத்தில் நடந்துகொள்கின்றனர். இவர்கள் தான் மத்தியகிழக்கின் இதயத்தில் குத்தி இஸ்ரேலைநிர்மாணித்தவர்கள்.இப்போதுஅதே இஸ்ரேலின் பாதகாப்புஎன்றபோர்வையில் அமெரிக்க ஜனாதிபதியும் குரல் கொடுத்துவருகின்றமைகேவலத்தின் உச்சமாகும்.
இதில் மிகவும் கேவலமானமற்றொருவிடயம் யாதெனில் ஐக்கியநாடுகள் அமைப்புக்குள்ளும் அதன் முக்கியமானஅமைப்புகளுக்குள்ளும் சட்டவிரோதமான இஸ்ரேலும் உள்வாங்கப்படடுள்ளமையாகும். ஆனால் இஸ்ரேலினால் பாதிக்கப்பட்டதமதுசுதந்திரத்தையும் உரிமைகளையும் இழந்துள்ளபலஸ்தீனம் இன்னமும் இந்தஅமைப்புகளுக்குள் அனுமதிக்கப்படாமையாகும். அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் காட்டுமிராண்டிகளான இஸ்ரேலியயூதசக்திகள் எந்தளவுதமதுகட்டுப்பாட்டில் வைத்துள்ளனஎன்பதற்கு இது ஒன்றேபோதுமானஉதாரணமாகும்.
இஸ்ரேலுக்குஎதிராக இதுவரைஐக்கியநாடுகள் சபையில் 120க்கும் மேற்பட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்தவகையில் உலகிலேயேமிகவும் கண்டனத்துககுஉள்ளானஒருநாடாகஅதுவே இன்றுவரைகாணப்படுகின்றது. அந்தப் பிராந்தியத்தில் மட்டும் அன்றிஉலகில் ஏற்படும் எல்லாப் பிரச்சினைகளினதும் கலவரங்களினதும் மூல காரணமாகவும் இஸ்ரேலேதிகழ்ந்துவருகின்றது. ஆனால் இதைஎல்லாம் கண்டுகொள்ளாமல் ஐக்கியநாடுகள் சபை அமைதிகாத்துவருகின்றது. அதற்குமுக்கியகாரணம் அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் செல்லப்பிள்ளையாக இஸ்ரேல் இன்றும் இருந்துவருகின்றமைதான்.
பலஸ்தீனமக்களைதிரும்பிப் பார்க்கக் கூட இன்றுயாரும் இல்லை. அரபுசர்வாதிகாரிகள் அந்தமக்களின் முதுகில் குத்திதுரோகம் இழைத்துவிட்டனர். மேற்குலகஊடகங்களோ இன்றுஅந்தமக்களைத் தான் பயங்கரவாதிகள் என்றுமுத்திரைகுத்திஉள்ளன.
Post Disclaimer
Disclaimer: தீமைவென்றது : நீதிமரணித்தது : ஐக்கியநாடுகள் சபை உருக்குலைந்தது : உலகமேமுடிவுக்குவந்தது - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect www.globalmuslimscenario.com/ point-of-view
Post Disclaimer |
IMPORTANT : All content hosted on globalmuslimscenario.com is solely for non-commercial purposes and with the permission of original copyright holders. Any other use of the hosted content, such as for financial gain, requires express approval from the copyright owners.