அமெரிக்கப் படைவிலகலும் அதன் தொடராகதலிபான்கள் முக்கியநகரங்களைக் கைப்பற்றுவதும் மாவீரன் அலெக்ஸாண்டர்ஆப்கானிஸ்தான் பற்றிக் குறிப்பிட்டதைநிரூபிக்கின்றது லத்தீப் பாரூக்

Spread the love

சுமார் 20 வருடங்களாகநீடித்துவந்தயுத்தத்தின் பின் அமெரிக்காசெப்டம்பர் 11ம் திகதிக்குமுன் ஆப்கானிஸ்தானில் இருந்ததனதுபடைகளைமுற்றாகவிலக்கிக் கொள்ளும் நடவடிக்கையில் துரிதமாகஈடுபட்டுவருகின்றது. இதன் தொடராகதலிபான் இயக்கத்தினர்ஆப்கானிஸ்தானின் முக்கியமாகாணத் தலைநகரங்களைகைப்பற்றிதமதுகட்டப்பாட்டின் கீழ் கொண்டுவருவதில் தீவிரம் காட்டிவந்தநிலையில்அவர்கள் தற்போதுதலைநகர்காபூலையும் கைப்பற்றிஜனாதிபதிமாளிகையையும் தமதுகட்டு;பாட்டின் கீழ் கொண்டுவந்துவிட்டனர். ஆப்கானிஸ்தான் ஜனாதிபதிஅண்டைநாடான தஜிகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளார். புதியஅரசுபிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் யுத்தம் முடிந்துவிட்டதுஎன்றதலிபான்களின் அறிவிப்பும் இன்று 2021 ஆகஸ்ட் 16ல்; வெளியாகிஉள்ளது.
பதவியேற்கக் காத்திருக்கும் ஒருஅரசாங்கமாகதலிபான்கள் தற்போதுதம்மைக் கருதிவருகின்றனர். அவர்கள் தற்போதுதங்களை‘இஸ்லாமியஆப்கானிஸ்தான் அமீரகம்’என்றும் அழைக்கத் தொடங்கிஉள்ளனர். 1996 வரைதலிபான்கள் பதவியில் இருந்தபோது இந்தப் பெயரைப் பாவித்துவந்தமை இங்குநினைவூட்டத்தக்கது.செப்டம்பர் 11தாக்குதலின் பின் அவர்கள் பதவியில் இருந்துகவிழ்த்தப்படும் வரை இந்தப் பெயரைப் பாவித்துவந்துள்ளனர். இப்போதுஅவர்களிடம் ஒருநவீனநிழல் கட்டமைப்புகாணப்படுகின்றது. தாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளபகுதிகளில் அன்றாடக் கடமைகளைமேற்பார்வைசெய்யஅவர்கள் தமதுஅதிகாரிகளையும் நியமித்துள்ளனர்.

மாவீரன் அலெக்ஸாண்டர்சுமார் 320 ஆண்டுகளுக்குமுன் கூறுகையில் ‘ஆப்கானிஸ்தானுக்குள் இலகுவாகஅணிவகுத்துச் செல்லலாம் ஆனால் அங்கிருந்துவெளியேறுவதென்பதுமிகவும் கடினமானஒன்று’என்றார். ஆப்கானிஸ்தான் தொடர்பானதனதுஅனுபவத்தின் அடிப்படையில்அந்தவரலாற்றுவீரன் குறிப்பிட்டவிடயத்தில் இருந்துஅன்றையசோவியத் யூனியனோஅல்லது இன்றையஏகவல்லரசானஅமெரிக்காவோஎந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ளத் தவறிவிட்டனஎன்பதேஉண்மைநிலையாகும்.

1979ல் ஆப்கானிஸ்தானைசோவியத் யூனியன் ஆக்கிரமித்தது. இதன் மூலம் அந்தநாட்டுக்கென்றேதனித்துவமானமுறையில் இருந்தஒருஉன்னதமானஅரசியல் கட்டமைப்புநாசமாக்கப்பட்டது. அதன் உள்கட்டமைப்பு,பொருளாதாரவளங்கள்என்பனசிதைக்கப்பட்டுஏற்கனவே கஷ்டங்களோடுவாழ்ந்துவந்தமக்கள் மீதுமேலும் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாதஅளவுககுதுயரங்கள் திணிக்கப்பட்டன. இதன் விளைவாக இலட்சக்கணக்கானமக்கள் வெற்றுக் கரங்களோடுஅண்டைநாடானபாகிஸ்தானில் அகதிமுகாம்களுக்குள் முடக்கப்பட்டனர். ரஷ்யாவின் கொடூரமான இராணுவத் தாக்குதல்கள் மூலம் ஆப்கானிஸ்தானின் ஆயிரக்கணக்கானஅப்பாவிஆண்களும்,பெண்களும்,சிறுவர்களும்,முதியவர்களும் ஈவு இரக்கமின்றிகொன்றுகுவிக்கப்பட்டனர். ஆழமானசமயஉணர்வுகளைக் கொண்டிருந்தஒட்டுமொத்தசமூகக் கட்டமைப்பும் அங்குநாசமாக்கப்பட்டது. 1980களின் நடுப்பகுதியில் ஆப்கானிஸ்தான் முஜாஹிதீன்களின் பிரதானதலைவர்களில் ஒருவரானகுலுப்புத்தீன் ஹிக்மதியாரைநான் துபாயில் சந்தித்தபோது,தமக்கேஉரியபாரம்பரியதுணிச்சல் மற்றும் தைரியம் என்பனபற்றிஅவர் கூறுகையில் ‘சோவியத் யூனியனின் புதைகுழியாகஆப்கானிஸ்தான் மாறும் என்பதைநாம் உறுதிசெய்வோம்’என்று கூறினார். அன்றுஅவர் கூறியதுபிற்காலத்தில் உண்மையானது. போதியஆயுதங்களும் பயிற்சியும் அற்றஆப்கானிஸ்தான் மக்கள் முன்னிலையில் அன்றையமாபெரும் வல்லரசுகளில் ஒன்றாக இருந்தசோவியத் யூனியன் இரத்தம் வழியவழியமண்டியிட்டுநின்றது. கடைசியாக 1989ல் சோவியத் யூனியன் சிதைவுற்றது. அதன் பிறகு 2001ல் போலிக் காரணங்களைக் கூறிக் கொண்டுஅப்கானிஸ்தானுக்குள் பிரவேசித்தஅமெரிக்கா இன்றுதலைதெறிக்கபின்வாங்கிஓடவேண்டியநிலைக்குவந்துள்ளது.
சோவியத் யூனயனுக்குஏற்பட்டநாசகாரஅழிவுகளில் இருந்தும் அனுபவத்தில் இருந்தும் கூட சரியானபாடங்களைக் கற்றுக் கொள்ளத் தவறியஅமெரிக்காஅதன் நேட்டோஅணியைத் திரட்டிக் கொண்டு 2001 அக்டோபரில் ஆப்கானிஸ்தானைஆக்கிரமித்தது. அமெரிக்காவால் உருவாக்கப்பட்டஅல்குவைதாதான் செப்டம்பர் 11 அழிவைஏற்படுத்தியதுஅதற்குதுணையாகஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு இருந்ததுஎன்றும,; போலிக் குற்றச்சாட்டைமுன்வைத்துஅமெரிக்காஅங்குபிரவேசித்தது. ஆனால் அல்குவைதாவுக்குஆதரவளித்ததாகசொல்லப்படும் தலிபான்கள் கூட அமெரிக்காவால் உருவாக்கப்பட்டவர்கள் தான் என்பதைஅமெரிக்காஅப்போதுமறந்துவிட்டது. ஆனால் இந்தக் குற்றச்சாடடுக்களைஎல்லாம் மீறிசெப்டம்பர் 11இல் அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்டஅழிவுகளுக்கும் உயிர் இழப்புக்களுக்கும் எந்தஒரு முஸ்லிமும் எந்தவகையிலும் காரணம் அல்லஎன்பதுபின்னர்தெளிவாகநிரூபிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கநிர்வாகத்தின் உண்மையானகுறிக்கோள் 2007இல் அமெரிக்க ராஜாங்கஉதவிச் செயலாளர்றிச்சர்பௌச்சரினால் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஆப்கானிஸ்தானை ஸ்திரப்படுத்துங்கள். அப்போதுஅதுதெற்காசியாவுக்கும் மத்தியஆசியாவுக்கும் இடையிலானஒருதொடர்புமையமாகஉருவாகமுடியும். அப்போதுதெற்கில் சக்தி வளம் பெருக்கெடுக்கமுடியும்’என்றார்
ஆனால் அமெரிக்காவின் படையெடுப்புஏற்கனவேஒருபடையெடுப்பால் நாசமாகிப் போயிருந்தஆப்கானிஸ்தானைமேலும் சிதைத்துமுழுமையாகசின்னாபின்னமாக்கியது.

மனிதஉயிரிழப்புக்களுக்குமேலதிகமாகவீதிகள்,வீடுகள்,தொலைக்காட்சிமற்றும் வானொலிநிலையங்கள்,பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள் என்பனஉற்படசகலஉள்கட்டமைபபுக்களும் நாசமாக்கப்பட்டன.கார்பெட் குண்டுவீச்சு,ஏவுகணைத் தாக்குதல்கள்,கொத்தணிக் குண்டுவீச்சுகள்,பங்கர் பஸ்டர்குண்டுகள் எனஎல்லாமேஅங்குமனிதஉயிர்களையும் சொத்துக்களையும் அழிக்கப் பயன்படுத்தப்பட்டன. இந்தத் தாக்குதல்கள் காரணமாகஏற்பட்டமனிதஉயிர்களுக்குமேலதிகமாகமேலும் ஆயிரக்கணக்கானஉயிர்கள் பட்டினிக்கும் பல்வேறுநோய்களுக்கும்; பலியாகின. இதில் கணிசமானஅளவுசிறுவர்களும் அடங்குவர். அமெரிக்கநேசஅணியைச் சேர்ந்தவரும் ஆப்கானிஸ்தானின் யுத்தப் பி;ரபுக்களில் ஒருவராகவும் இருந்தஅப்துல் றாஷிட் தொஸ்தம் வரலாற்றின் மத்தியபகுதிகாலங்களில் இடம்பெற்றதுபோன்றகொடூரமான மூர்க்கதனம் மிக்ககாட்டுமிராண்டித் தாக்குதல்களைகட்டவிழ்த்துவிட்டார். அமெரிக்க-நேட்டோபடைகளின் பிரவேசத்தோடு இந்தக் கொடூரங்களும் அரங்கேறத் தொடங்கின.

1979ல் சோவியத் ஆப்கானிஸ்தானைஆக்கிரமித்தபோதுசவூதியில் ஒருபிரபலமானசெல்வந்தக் குடும்பத்தில் பிறந்துவளர்ந்த ஒஸாமா பின் லேடனின் துணையோடுஅல்குவைதாஅமைப்புதொடங்கப்பட்டது. அவர்தனதுசொத்துசுகங்கள் எல்லாவற்றையும் துறந்துவிட்டுஆப்கானிஸ்தானைமீட்டெடுக்ககளம் இறங்கினார். வெளிஉலகில் இருந்துபணம்,ஆயுதம் மற்றும் போராடத் தேவையானஆட்களையும்; தனதுபணத்தைசெலவழித்து ஒஸாமாஆப்கானிஸ்தானுக்குள் கொண்டுவந்தார்.

உலகவல்லரசுப் போட்டியில் தனக்குநிகரானஒரேஎதிரியாகஅமெரிக்காகருதியசோவியத் யூனியனைமண் கவ்வச் செய்வதற்குஅமெரிக்காஆப்கானிஸ்தான் முஜாஹிதீன் போராளிகளுக்குபக்கபலமாகநின்றுஆயுதம்,பணம்,பயிற்சிஎனதேவையானஎல்லாஉதவிகளையும் வழங்கியது. அவ்வாறுதான் சோவியத்துக்குஎதிரானஆப்கானிஸ்தான் யுத்தத்தில் அமெரிக்காவின் நம்பத் தகுந்தபங்காளியாக பின் லேடன் மாறினார். பின் லேடனின் தியாகம்,வியக்கத்தக்கசெயற்பாடுகள் என்பனகாரணமாக இஸ்லாமியஉலக இளைஞர்களால் அவர்ஒரு ஹீரோவாகப் பார்க்கப்பட்டார். ஒருபெரும் செல்வந்தர்தனதுசெல்வங்களைஎல்லாம் தியாகம் செய்துவிட்டு ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்குஎதிராகப் போராடுவதற்காககுகைவாழ்க்கையைத் தெரிவுசெய்துள்ளார்என்றரீதியில் அமெரிக்கஊடகங்களும் அவருக்குமுக்கியத்துவம் வழங்கிபிரசாரம் மேற்கொண்டன.
இறுதியில் சுமார்பத்துவருடங்கள் கழித்து 1989ல் வெற்கக் கேடானமுறையில் தனதுதோல்வியைஏற்று இரத்தக் கரைகளோடும் வழிந்தோடும் இரத்தத்தோடும் அதன் வலிகளோடும் ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்துமண்டியிட்டுவெளியேறும் நிலை ரஷ்யாவுக்குஏற்பட்டது.

அதன் பிறகுதலிபான்கள் பலநகரங்களைமிகத் துரிதமாகதமதுகட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். அந்தத் தாக்குதல்களின் தொடராக 1996 செப்டம்பரில் தலைநகர்காபுலும் தலிபான்களிடம் வீழ்ந்தது.யுத்தம் செய்யும் குழுக்களால் ஏற்பட்டஏமாற்றங்கள்,பலவருடகாலமாகநீடித்தமோதல்கள் என்பனவற்றால் பாதிக்கப்பட்டிருந்தமக்கள் வேறுவழியின்றிதலிபான்களைவரவேற்றனர். கொந்தளித்துக் கொண்டிருந்ததமதுநாட்டில் தலிபான்கள் ஓரளவுக்குஅமைதியையும் ஸ்திரநிலையையும் மீண்டும் ஏற்படுத்தினர்.

அந்தகாலகட்டத்தில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் அங்குஒருவெறியாட்டத்தை ஆடி முடித்திருந்தவேளையில் தலிபான்கள் ஓரளவுக்குசாதகமானபங்களிப்பைவழங்கினர். சட்டம் ஒழுங்கின்றிசீரழிந்துபோயிருந்தஅந்தநாட்டில் அவர்கள் மீண்டும் சட்டத்தையும் ஒழுங்கையும் ஸ்திரநிலையையும் ஸ்தாபித்தனர். வெறித்தனம் மிக்கயுத்தப் பிரபுக்கள் சிலரையும் பாதாளஉலகக் கோஷ்டிகளையும் அவர்கள் ஒழித்துக் கட்டினர். சிவில் யுத்தமும் முடிவுக்குகொண்டுவரப்பட்டது. ஊழலுக்குமுடிவுகட்டினர். வியாபாரம் மற்றும் வர்த்தகம் என்பனவற்றுக்கானவழிகளைத் திறந்துவிட்டுநாட்டின் ஒருமுனையில் இருந்து இன்னொருமுனைக்குபயணங்களைமேற்கொள்ளும் வகையில் மக்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்தனர். தாக்குதல் அச்சங்கள் எதுவும் இன்றிமக்கள் நடமாடத் தொடங்கினர். போதைப் பொருள் செய்கைஉற்படஅந்தவர்த்தகத்துக்கும் அதில் ஈடுபட்டபிரதானநபர்கள் சிலருக்கும் முடிவுகட்டப்பட்டது.

நேர்மை,கௌரவம்,தார்மிகவிழுமியங்கள் என்பனவற்றுக்கும் தலிபான்கள் உதாரணமாகத் திகழ்ந்தனர்.ஆப்கானிஸ்தானில் இருந்தபோதுதலிபான்கள் கைதுசெய்யப்பட்டபிரிட்டிஷ் பெண் ஊடகவியலாளர்யுவோன் றிட்லிவிடுதலைசெய்யப்பட்ட பின் இஸ்லாத்தைஏற்றார். தான் கைதுசெய்யப்படடுவைக்கப்பட்டிருந்தபோதுதான் மிககௌரவமாகநடத்தப்பட்டதாகவும் தலிபான்களின் கௌரவமானசெயற்பாடுகளேதான் இஸ்லாத்தைத் தழுவக் காரணம் என்றும் அவர்குறிப்பிட்டிருந்தார். ஈராக்,லிபியாஆகியநாடுகளில் அமெரிக்கப் படைவீரர்கள் வெறிதத்தனமாகப் பெண்களைவேட்டையாடியதைவிட இது முற்றிலும் மாறுபட்டகதையாகும்.
அந்தக் காலப் பகுதியில் செப்டம்பர் 11ல் அமெரிக்காவில் வாஷிங்டன் மற்றும் நியுயோர்க் நகரங்களில் நடத்தப்பட்டபயங்கரத்

தாக்குதல்களைஅடுத்துஅதைசாட்டாகவைத்துதலிபான்களுக்குஎதிராககுற்றச்சாட்டுக்களைமுன்வைத்து ஜோர்ஜ் புஷ்ஷ{ம் அவரது நவ காலணித்துவபங்காளிகளும் ஆப்கானிஸ்தான் மீதுமீண்டும் சீறிப் பாய்ந்தனர்.அவர்கள் தங்களதுமேலாதிக்கத்தைஅங்கேநிறுவினர். மத்தியஆசியப் பிராந்தியத்தில் உள்ளஅமெரிக்கஎண்ணெய் உற்பத்திக் கம்பனிகளைவளப்படுத்துவதும் ஆயுதஉற்பத்தித் துறைக்கும் அதனோடுதொடர்புடைய கூட்டாண்மைநிறுவனங்களுக்கும் ஆதரவளிப்பதுதான் அவர்களின் நோக்கமாக இருந்தது.
ஏற்கனவேதுவம்சம் செய்யப்பட்டிருந்தநாட்டில் எஞ்சியிருந்தஎல்லாவற்றையும் அமெரிக்காவும் அதன் நேசஅணிகளும் சின்னாபின்னமாக்கின. முழுமையாகநாசமாக்கப்பட்டஒருபிராந்தியமாகஆப்கானிஸ்தான் உருமாறியது. மனிதஉயிரிழப்புகளுக்குமேலதிகமாகவீடுகள்,பாடசாலைகள்,வீதிகள் வானொலிமற்றும் தொலைக்காட்சிநிலையங்கள் எனஎல்லாமேநாசமாக்கப்பட்டன. கார்பெட் குண்டுவீச்சு,கொத்தணிகுண்டுவீச்சு,ஏவுகணைத் தாக்குதல் எனஅன்றாடம் இடம்பெற்றவிதவிதமானதாக்குதல்களால் ஆயிரக்கணக்கானஉயிர்கள் அழிக்கப்பட்டதோடுமட்டுமன்றிஉடைமைகளுக்கும் பெரும் அழிவுஏற்படுத்தப்பட்டது. இவற்றுக்குஅப்பால் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரைபட்டினியால் வாடும் நிலையும் மரணிக்கும் நிலையும் அங்குஏற்படுத்தப்பட்டது.

மத்தியஆசியாவின் எண்எணய் வளங்களைதனதுநிறுவனங்கள் சூறையாடுவதற்கு அமெரிக்காவகுத்ததிட்டத்தோடுதலிபான்கள் இசைந்துபோயிருந்தால் அவர்கள் அமெரிக்காவுக்குமட்டும் அன்றி முழு மேற்குலகினதும் நல்லநண்பர்களாக இருந்திருக்கலாம். ஆனால் அந்தசதிக்கு இணங்கமறுத்ததாலும் அப்போதுஆப்கானிஸ்தானில் இருந்த ஒஸாமாபின்லேடனைஅவர்களிடம் ஒப்படைக்கமறுத்ததாலும்தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்தஆப்கானிஸ்தான்,அழிவுகளைசந்திக்கநேர்ந்தது.

மத்தியஆசியாவின் எண்ணெய்வளத்தை சூறையாடுவதற்காக பிராந்தியநாடுகளுடன் அமெரிக்காஅவசரஅவசரமானஒப்பந்தங்களைச் செய்துகொண்டது. இந்தப் பிராந்தியத்தில் இருந்துசீனாவையும் ஜப்பானையும் தூரமாகஒதுக்கிவைப்பதே இந்தத் சதித் திட்டத்தின் நோக்கமாகும்.ஆனால் இன்று இந்தஅநியாயங்கள் அரங்கேற்றப்பட்டு 20 ஆண்டுகள் கழிந்துள்ளநிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்துசோவியத் யூனியன் வெளியேறியதைப் போலவேவெற்கத்துடனும்,அவமானத்துடனும், இரத்தக்கறைகளுடனும், இரத்தம் வழியவழியஅமெரிக்காவும் அவசரஅவசரமாக மூட்டைமுடிச்சுக்களுடன் வெளியேறிக் கொண்டிருக்கின்றது.

Post Disclaimer

Disclaimer: அமெரிக்கப் படைவிலகலும் அதன் தொடராகதலிபான்கள் முக்கியநகரங்களைக் கைப்பற்றுவதும் மாவீரன் அலெக்ஸாண்டர்ஆப்கானிஸ்தான் பற்றிக் குறிப்பிட்டதைநிரூபிக்கின்றது லத்தீப் பாரூக் - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect www.globalmuslimscenario.com/ point-of-view

Post Disclaimer |

IMPORTANT : All content hosted on globalmuslimscenario.com is solely for non-commercial purposes and with the permission of original copyright holders. Any other use of the hosted content, such as for financial gain, requires express approval from the copyright owners.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *