லத்தீப் பாரூக்
2020 நவம்பர் 22 ஞாயிற்றுக்கிழமைதினம் தான் சட்டத்தைதுச்சமெனமதிக்கும் இஸ்ரேலியப் பிரதமர்பென்ஜமின் நெத்தன்யாஹ{வை முஸ்லிம்களின் புனித இல்லங்களானமக்காமற்றும் மதீனாஎன்பனவற்றின் காவலன் தனதுமண்ணில் வரவேற்றநாளாகும்.
பலஸ்தீனமக்களைகொடுமைக்குள்ளாக்கிஅங்குள்ளபள்ளிகளைநிர்மூலமாக்கிவரும் ஒருவரைசவூதிஅரேபியாவில் வரவேற்றஅன்றையநாள் உலக முஸ்லிம்களின் வரலாற்றில் ஒருவெற்கக் கேடானநாளாகப் பதியப்படும்.உரிமைக் குரல் எழுப்பவழியின்றிநிர்க்கதிநிலையில் உள்ளஉலக முஸ்லிம்கள் அவமானப்படுத்தப்பட்டதினமாக இந்தத் தினம் பதியப்படும்.
இஸ்ரேலியப் பிரதமர்பென்ஜமின் நெத்தன்யாஹ{ தனதுகரங்களில் பலஸ்தீனமக்களின் இரத்தக்கறைபடிந்தவர். அவரைசவூதி இளவரசர்தாம் உருவாக்கிவரும் எதிர்காலசெங்கடல் உல்லாசபுரிநகரில் வரவேற்று மூன்றுமணிநேரம் சந்தித்துப் பேசிஉள்ளார். இந்தச் சந்திப்புக்குபூரணஒத்துழைப்புவழங்கிதானும் அதில் பங்கேற்றுள்ளார்அமெரிக்காவில் இப்போதுபதவிவிலகிச்செல்லத் தயாராகஉள்ளசுவிஷேச கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்தவெளிவிவகாரசெயலாளர்மைக் பெம்பியோ.
இஸ்ரேலியஆதரவுமேலைத்தேசஊடகங்களில் இந்தச் சந்திப்புக்குஅமோகபிரசாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் சவூதி இதைமறுத்துள்ளது. இது ஒருபொய் எனசவூதி கூறுகின்றது. ஆனால் இஸ்லாத்தில் வெறுக்கப்பட்டபெரும் பாவங்களில் ஒன்றாகக் கருதப் படும் பொய் உரைப்பதுஒன்றும் சவூூதிக்குபுதியவிடயம் அல்ல. பொய் என்பதுஅந்தஆட்சியில் இரண்டறக் கலந்தஒருவிடயம்.
ஆனால் உண்மையில் 1990 களில் இருந்தே இத்தகைய இஸ்ரேல் தலைவர்களுக்கும் அதன் உளவுபிரிவானமொஸாட்டின் உயர்அதிகாரிகளுக்கும் இடையிலான இரகசியசந்திப்புக்கள் சவூதிஅரேபியஅரசமாளிகைகளில் இடம்பெற்றுவருகின்றன. இந்தசந்திப்புக்கள் பற்றிவிவரங்கள் வெளியேதெரிந்தால் அதுமோசமானவிளைவுகளைக் கொண்டுவரும் என்றஅச்சம் காரணமாகசவூதிஅரேபியஆளும் தரப்பு இந்தசந்திப்புக்களைமிக இரகசியமாகப் பேணிவருகின்றது. இதற்குபிரதானகாரணம் இஸ்ரேலைதமதுவெறுப்புக்குரியஒருவிரோதியாகவேசவூதிஅரேபியமக்களுள் பெரும்பாலானவர்களும் மதத் தலைவர்களும் கருதிவருகின்றனர்.
இதைவிடஉலக முஸ்லிம்களிடம் இருந்துமிகவும் இரகசியமாகவைக்கப்பட்டுள்ளஒருவிடயம் என்னவென்றால் சவூதிமற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டுமேபிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் உருவாக்கப்பட்டவை. பிரிட்டிஷ் நாணயத்தின் இரு பக்கங்கள் தான் இவ்விருநாடுகளும் என்பதே முஸ்லிம்களிடம் இருந்துமறைக்கப்படடுள்ளயதார்த்தாகும். 20ம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத்தில் மத்தியகிழக்குபிராந்தியம் குழப்பநிலையில் இருந்தது. பழங்குடிஆட்சியாளர்கள் புலர்அந்தப் பிராந்தியத்தின் பலபகுதிகளைதத்தமதுகட்டுப்பாட்டின் கீழ் கொண்டிருந்தனர்.
1918ம் ஆண்டுகாலப்பகுதியில் முதலாவதுஉலகமகாயுத்தத்தின் போதுபிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் காலணித்துவசக்திகள் மத்தியகிழக்கைதமதுகட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துஅங்குபலஸ்தீனதாயகபூமியில் யூதநாட்டைஉருவாக்குவதற்காகசதித்திட்டத்தைமேற்கொண்டனர். தனது இந்த இலக்கைஅடைந்துகொள்ளபிரிட்டன் அரபுஆட்சியாளர்களின் தயவைநாடியது.
அப்துல் அஸீஸ் இப்னு அல் சவூத் அப்போதுஅரோபியாவின் மத்தியபகுதியான நஜதில் ஒருசிறியபழங்குடிகோத்திரஆட்சியாளராக இருந்தார். அப்போதுதுருக்கிப் பேரரசின் ஆளுனராக ஹிஜாஸ் மாநிலத்தில் இருந்த ஷரீப் ஹ{ஸேன் மீதுதாக்குதல் நடத்தபிரிட்டிஷ் அரசு இப்னுசவூதைப் பயன்படுத்தியது. புனிதப் பிரதேசங்களானமக்காமற்றும் மதீனாஆகியநகரங்களைஉள்ளடக்கிய ஹிஜாஸ் மாநிலத்தின் ஆளுனராக இருந்த ஷரீப் ஹ{ஸேன் இஸ்ரேலின் உருவாக்கத்தைதீவிரமாகஎதிர்த்ததேஅவர்மீதுதாக்குதல் நடத்தமுக்கியகாரணமாயிற்று.
ஷரீப் ஹ{ஸேனை பதவியில் இருந்து தூக்கிஎறிந்த பின்1932ல் பிரிட்டிஷ் பேரரசுபுதிதாகஒன்றிணைக்கப்பட்ட வஹ்ஹாபி ராஜ்ஜியத்தை (சவூத் இல்லம்) சவூதிஅரேபிய ராஜ்ஜியம் என்று மறு பெயர் இட்டது.இந்தசவூதிகோத்திரநிர்வாகத்தின் கீழ் இஸ்லாத்தின் இருபெரும் புனித ஸ்தலங்களானமக்காவும் மதீனாவும் கொண்டுவரப்பட்டன. இவ்வாறுதான் வஹ்ஹாபியர்கள்; பிரிட்டிஷ் பேரரசுஅரேபியாவில் சியோனிஸத்தைநிலைநிறுத்ததுணைநின்றனர்.அன்றுமுதல் சவூதிஅரேபியா இஸ்லாத்தின் காவலனாகவும் அதன் புனிதத் தலங்களானமக்காமதீனாஎன்பனவற்றின் காவலனாகவும் தன்னைவெளிஉலகுக்கும் முஸ்லிம் உலகுக்கும் காட்டிக் கொண்டுசியோனிஸ்ட்டுகளுடன் இரகசியஉறவுகளைப் பேணிவருகின்றது.
யெமனின் முன்னாள் ஜனாதிபதிஅலிஅப்துல்லாஹ் சாலேஹ் படுகொலைசெய்யப்பட இரு தினங்களுக்குமுன் ஒருவிடயத்தைக் குறிப்பிட்டிருந்தார். 1967 ஜுனில் இஸ்ரேல் அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் ஆதரவோடுதான் அரபுநாடுகள் மீதுஆக்கிரமிப்பைமேற்கொண்டது. இதற்குகாரணம் அன்றையசவூதிஅரேபியமன்னர்பைஸால் அன்றையஅமெரிக்க ஜனாதிபதிலிண்டன் பி ஜோன்ஸனிடம் இந்தஆக்கிரமிப்பைநடத்துமாறுவிடுத்தவேண்டுகோளாகும் என்பதுதான் அவர்தெரிவித்ததகவல்.இதன் மூலம் அரபிகள் மேற்குகரை,காஸா, ஜெரூஸலம்,கோளான் குன்றுஆகியபகுதிகளை இழந்தனர்.அரபிகள் மீதும் முஸ்லிம்களின் தார்மிகவிழுமியங்கள் மீதும் விழுந்தபேரிடியாகவே இது கருதப்படுகின்றது.
அன்றுமுதல் சவூதிஆளும் வர்க்கம் இஸ்ரேலுடனும் அவர்களதுபிரிட்டிஷ் அமெரிக்க எஜமானர்களோடும் நகமும் சதையும் போல் ஒன்றிணைந்துள்ளனர். அந்தவகையில் தான் முஸ்லிம் நாடுகள் மீது இந்தஆதிக்கவெறிகொண்டசக்திகளால் தொடுக்கப்பட்டஎல்லாயுத்தங்களிலும் பங்கேற்றுஅந்தநாடுகளைஅழிப்பதிலும் இலட்சக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றுகுவிப்பதிலும் தீவிரப் பங்கேற்றுமத்தியகிழக்கைகொலைகளமாகமாற்றிதமது இருப்பைத் தக்கவைத்துவருகின்றனர்சவூதிஅரேபியஆட்சியாளர்கள்.
எட்டுவருடங்கள் நீடித்தஈரான் ஈராக் யுத்தத்தில் பத்துலட்சத்துக்கும் அதிகமானமக்கள் கொல்லப்பட்டதோடு இரு நாடுகளும் பாரியஅழிவுகளைச் சந்தித்தன. குவைத்தில் இருந்துஈராக்கியபடைகளைவெளியேற்றநடத்தப்பட்டபடையெடுப்பு,அதன் பிறகுஈராக் மீதுகொடுக்கப்பட்டயுத்தம், இதிலும் மில்லியன் கணக்கானமக்கள் அகதிமுகாம்களுக்குள் தள்ளப்பட்டதோடுஈராக் முழுமையாகநாசமாக்கப்பட்டுமதிப்பிடமுடியாத இழப்புக்களும் ஏற்படுத்தப்பட்டன. 1990ல் அல்ஜீரியாவில் ஏற்படுத்தப்படவிருந்தமக்கள் விருப்பத்துடன் கூடிய இஸ்லாமியஆட்சிக்குசாவுமணிஅடித்துமதச்சார்பற்ற இராணுவசர்வாதிகாரம் அங்கு ஸ்தாபிக்கப்பட்டது. இவை எல்லாவற்றிலுமேசவூதிஅரேபியாவின் பங்களிப்புக்கானதடயங்கள் தெட்டத் தெளிவாகப் பதிவாகிஉள்ளன.
சவூதிஅரேபியாவற்புறுத்தியதன் விளைவாகஅவர்கள் கொடுத்த இலஞ்சத்தைப் பெற்றுக் கொண்டுதான் பலஸ்தீனவிடுதலை இயக்கத்தின் தலைவர் யஸர் அரபாத் 1993 செப்டம்பரில் ஒஸ்லோவில் இஸ்ரேலுடனானசமாதானஉடன்படிக்கையில் ஒப்பமிட்டார். இந்தஉடன்படிக்கைதான் படிப்படியாகபலஸ்தீனவிடுதலைபோராட்டத்துக்குசாவுமணிஅடித்தது. 2011ல் ஏற்பட்டஅரபுஎழுச்சியின் போதுஅமெரிக்கா,ஐரோப்பாமற்றும் இஸ்ரேல் என்பனஒன்றிணைந்துசிரியாவையும் லிபியாவையும் யுத்தகளமாகமாற்றின. செழுமைமிக்க இந்ததேசங்களின் எண்ணெய்,தங்கம் மற்றும் பணம் என்பனவற்றைதாங்கள் கொள்ளையடிப்பதற்காகஅங்கேமக்கள் மத்தியில் பிளவுகளும் மோதல்களும் உருவாக்கப்பட்டன. இதுவரைலட்சக்கணக்கான முஸ்லிம்கள் இந்தமோதல்களில் பலியாகிஉள்ளனர்.
ஏகிப்தில் அந்தநாட்டுமக்கள் 60 வருடங்களின் பின் முதற் தடவையாகசுதந்திரமான,நீதியானஒருதேர்தலின் மூலம் ஜனநாயகரீதியானஒருதலைவரைத் தெரிந்துஎடுத்தனர். அவர்தான் இஸ்லாமியசகோதரத்துவ இயக்கத்தின் பிரதிநிதிமொஹமட் முர்ஷி. ஆனால் அவருடையதெரிவின் பின் அந்தநாட்டுமக்களைதமதுவிருப்பம் போல் நிம்மதியாகவாழவிடாமல் சவூதிஅரேபியா,குவைத் மற்றும் ஐக்கியஅரபுஅமீரகம் என்பன இணைந்துசெயற்கையானஉணவுத் தடடுப்பாட்டையும் ஏனைய தட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தின. இதற்கென இந்தநாடுகள் இணைந்து 11 பில்லியன் அமெரிக்கடொலர்களைசெலவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிஉள்ளன. இந்தசெயற்கையானதட்டுப்பாடுஅங்குமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பைஏற்படுத்திகடைசியில் முர்ஷியும் ஆட்சியில் இருந்துகவிழ்த்தப்பட்டார். சதிகாரர்கள் ஏற்கனவேதிட்டமிட்டுகாத்திருந்தபடி இராணுவசர்வாதிகாரிஅப்துல் பத்தாஹ் சிசிஆட்சியில் அமர்த்தப்பட்டார். இன்று இந்தப் பிராந்தியத்தில் யூதவடிவமைப்புக்களுக்கு இவர்தான் உயிர்கொடுத்துவருகின்றார்.
கடந்தபலஆண்டுகளில் பல்வேறுசந்தர்ப்பங்களில் உலக முஸ்லிம்கள் சவூதிஆட்சியாளர்களின் உண்மைமுகத்தைஅடையாளம் கண்டுள்ளனர். இது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அற்றதாகவும் இஸ்லாத்தில் இருந்துவெகு தூரம் விலகிநிற்பதாகவுமேஅமைந்துள்ளது.
தனதுஅமெரிக்கமற்றும் ஐரோப்பிய எஜமானர்களைத் திருப்திப் படுத்தும் வகையில் இஸ்ரேலுடன் நெருக்கமானஉறவுகளைஏற்படுத்துவதற்காகசவூதிஅரேபியாபலஸ்தீனர்களுக்குதுரோகம் இழைத்துஅவர்களைக் கைவிட்டுள்ளது. இந்தியாவிலும் முஸ்லிம்களுக்குஎதிரானபிஜேபிஉடன் சவூதிகைகோர்த்துள்ளது. சீனாவில் யூகர் இன முஸ்லிம்களுக்குஎதிரானதாக்குதல்கள் பற்றிசவூதி இதுவரைவாய் திறக்கவே இல்லை. உலகம் முழுவதும் முஸ்லிம்களைக் கொன்றுகுவிப்பதற்கானஆயுதக் கொள்வனவுக்கு 18 பில்லியன் டொலர்களைமுதலீடுசெய்துள்ளசவூதிபெயரளவுக்குறோஹிங்யா முஸ்லிம்களுக்கு 30 பில்லியன் டொலர்களைமட்டும் கொடுத்துள்ளது.
சவூதிஅரேபியாவின் பூரணசம்மதத்தோடுதான் அமெரிக்க ஜனாதிபதிடிரம்ப் ஜெரூஸலத்தை இஸ்ரேலுக்குதாரைவார்த்துகொடுத்தார்.பாகிஸ்தான்,மலேஷியா,துருக்கி,ஈரான் ஆகியநாடுகளைஉள்ளடக்கிஉலகில் புதிய இஸ்லாமியஅமைப்புஒன்றுஉருவாவதையும் சவூதிதனதுபலத்தைகொண்டுநசுக்கிஉள்ளது. யெமன் நாட்டின் மீது இளவரசர்சல்மான் அபுதாபியின் உதவியோடுமேற் கொண்டுள்ளவிமானத் தாக்குதல்கள் இதுவரைஒருலட்சத்துக்கும் அதிகமானஉயிர்களைப் பலி எடுத்துள்ளது. அதுமட்டும் அன்றி இந்தத் தாக்குதல் அரபுலகின் ஏழ்மைமிக்க இந்தநாட்டைஅதளபாதாளத்துக்குள் தள்ளிவிட்டுள்ளது. யெமன் முஸ்லிம்கள் உற்படஅகதிமுகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளஉலக முஸ்லிம்கள் எல்லோருமே இன்றுபாதாளத்துக்குள் தள்ளப்பட்டநிலையில் தான் வாழ்ந்துவருகின்றனா.
இத்தகையஒருமோசமானபின்னணியில் தான் தற்போது இஸ்ரேலியபிரதரையும் தனதுமண்ணில் வரவேற்றுள்ளதுசவூதிஅரேபியா. இந்தப் பிராந்தியத்திலும் அதற்குஅப்பாலும் வாழும் முஸ்லிமகள் இதனால் ஆத்திரம் அடைந்துள்ளனர்.சவூதிஅரேபயாமக்களைவிட்டுவெகுதூரம் விலகிச் செல்கின்றது. எந்தநேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்றஒருஆபத்தானநிலைதான் அங்குஏற்பட்டுள்ளதுஎன்றுஎனதுஎகிப்தியஊடகவிலாளர்நண்பர்ஒருவர்என்னிடம் கூறினார்.
Post Disclaimer
Disclaimer: இஸ்லாத்தின் பூமியில் நெத்தன்யாஹ{வை வரவேற்றதுசவூதியின் ஏமாற்றுமுகமூடியைக் கிழித்துள்ளதோடுஉலக முஸ்லிம்களைஅவமானத்துக்குஆளாக்கியுள்ளது - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect www.globalmuslimscenario.com/ point-of-view
Post Disclaimer |
IMPORTANT : All content hosted on globalmuslimscenario.com is solely for non-commercial purposes and with the permission of original copyright holders. Any other use of the hosted content, such as for financial gain, requires express approval from the copyright owners.