இஸ்ரேலியக் கள்ளக் காதலர்களுடன் சவூதி அரேபியா அனுபவிக்கும் தேன்நிலவு : உலகளாவிய எதிர்ப்பு ஆhப்பாட்டங்களுக்கு வழியமைக்குமா? லத்தீப் பாரூக்

Spread the love

முஸ்லிம்களின் மிகவும் புனித ஸ்தலங்களான மக்கா மற்றும் மதீனா ஆகிய புனித நகரங்களினதும் அங்குள்ள பனிதப் பள்ளிவாசல்களினதும் காவலனாக தன்னை முஸ்லிம்கள் மத்தியிலும் இஸ்லாமிய உலகிலும் அடையாளம் காட்டிக் கொண்டே இஸ்ரேலின் அரம்ப நாற்கள் முதலே அதனோடு திருட்டுத்தனமான உறவுகளைப் பேணி வருகின்ற சவூதி அரசு இப்போது இஸ்ரேலுடன் உத்தியோகப்பூர்வமான உறவுகளை ஏற்படுத்தி அதனை அங்கீகரிக்கும் முயற்சியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளது. இஸ்ரேலுடன் இயல்பான ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவது என்பது இலகுவானதோர் காரியம் அல்ல. காரணம் இஸ்ரேல் ஒரு ஆக்கிரமிப்புச் சக்தி, பலஸ்தீனர்களை அவர்களது சொந்த இடத்தில் இருந்து துரத்தி அடித்தவர்கள், சட்டவிரோத செயற்பாடுகளிலும் வன்முறைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்கள்.

இனறு சவூதி அரசு தனது சுய இருப்புக்காக முற்று முழுதும் அமெரிக்காவில் தங்கி உள்ள ஒரு நாடு. தனது நாட்டின் ஆதரவின்றி இரு வாரங்களுக்குக் கூட சவூதி அரசால் தாக்குப் பிடிக்க முடியாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாகவே அறிவித்துள்ளார்.
இஸ்லாத்துக்கு முந்திய பழங்குடி ஆட்சி முறையிலான சவூதி அரேபிய அரசின் எண்ணக்கரு இஸ்லாத்தின் அசல் எண்ணக்கருவுக்கு முற்றிலும் முரண்பட்டதாகும்.

முதலாவது உலக மகா யுத்தத்தின் விளைவாக துருக்கியப் பேரரசு முற்றாகத் தோற்கடிக்கப்பட்டது. பலஸ்தீன தாயகத்துக்குள் இஸ்ரேலை உருவாக்குவதற்காக பிரிட்டன் அரபு உலகின் ஆதரவை நாடி நின்றது. அப்போது மக்கா மற்றும் மதீனா நகரங்களை உள்ளடக்கிய ஹெஜாஸ் மாநிலத்தின் ஆளுனராக இருந்த ஷரீப் ஹ{ஸேன் இஸ்ரேலின் உருவாக்கத்தை மிகக் கடுமையாக எதிர்த்தார். ஆனால் றியாத் மற்றும் நஜ்த் பிராந்தியங்களின் பழங்குடி ஆட்சியாளராக இருந்த இப்னு சவூத் முதலில் இஸ்ரேலை எதிர்த்தாலும் பின்னர் அதன் உருவாக்க விடயத்தில் அமைதி காத்தார்.

இந்த அமைதியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திய பிரிட்டன் இப்னு சவூதுக்குத் தேவையான ஆயுதங்களை வழங்கி லஞ்சமும் கொடுத்து ஹெஜாஸ் மாநில ஆளநர் ஷரீப் ஹ{ஸைனை தாக்கும் படி உத்தரவிட்டது. இதன் மூலம் அவர் பதவி கவிழ்க்கப்பட்டார். அதன் பிறகு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சக்திகள் இன்றைய சவூதி அரேபியாவை உருவாக்கி மக்கா மதீனா ஆகிய புனித நகரங்களையும் அதன் கீழ் கொண்டு வந்தன.

அன்று முதல் மேற்குலக சக்திகளுடன் நெருங்கிச் செயற்பட்ட சவூதி அரசு முஸ்லிம் நாடுகளில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளினால் நடத்தப்பட்ட எல்லா யுத்தங்களிலும் தாக்குதல்களிலும் அவர்களோடு தோளோடு தோள் நின்று பணியாற்றி உள்ளது. முன்னாள் யெமன் ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் சாலேஹ் தான் மரணம் அடைய இரண்டு தினங்களுக்கு முன்னர் தெரிவித்த கருத்தில் 1967ம் ஆண்டு சவூதி அரேபியாவின் வேண்டுகோளின் பிரகாரமே இஸ்ரேல் அரபு நாடுகள் மீது அக்கிரமிப்பை நடத்தியது என்று குறிப்பிட்டிருந்தார். சவூதியும் மேற்குலகும் இணைந்து தூண்டியதாலேயே முன்னாள் ஈராக் ஜனாதிபதி சதாம் ஹ{ஹேன் ஈராக் மீது போர் தொடுத்தார். ஏட்டு வருடங்கள் நீடித்த இந்தப் போர் இரு நாடுகளிலும் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியது. காலப் போக்கில் மரண தண்டனை என்ற பெயரில் சதாமின் கதையையும் முடித்தார்கள்.

ஏவ்வாறேனும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக சக்திகளின் நெருங்கிய நண்பனாகவும் மறுபுறத்தில் முஸ்லிம்களின் புனித நகரங்களினதும் புனித ஸ்தலங்களினதும் காவலனாகவும் சவூதி அரசு பூண்டுள்ள இரட்டை வேடத்தை மேற்குலக ஊடகங்கள் மிகவும் பத்திரமாகப் பாதுகாத்து வருகின்றன.

சுவூதி அரேபியாவின் அளவற்ற எண்ணெய் வளம் காரணமாக, புனித நகரங்கள் மீதான அதன் கட்டுப்பாடு, அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலின் ஈடு இணையற்ற ஆதரவு, எண்ணெய் வளம் மிக்க வளைகுடா ஷேக்மார் மீது சவூதி கொண்டுள்ள செல்வாக்கு என்பன தொடர்ந்து நீடிக்கின்றன. இதனால் தான் ஐக்கிய அரபு இராச்சியமும் பஹ்ரேனும் அண்மையில் இஸ்ரேலை உத்தியோகப்பூர்வமாக அங்கீகரித்து அதனோடு ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில் சவூதி அரேபிய பின்னணியில் ஒரு பலம் மிக்க சக்தியாகச் செயற்பட்டுள்ளது என பலரும் உறுதியாக நம்புகின்றனர். விரைவில் ஒமானும் இந்த வழிமுறையைப் பின்பற்றும் என பரவலாக எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதன் ஒரு அங்கமாக 2020 செப்டம்பர் நடுப் பகுதியில் மக்கா பெரிய பள்ளிவாசலின் இமாமான (பிரதம மதகுரு) அப்துல் ரஹ்மான் அல் சுதைஸ் ‘யூதர்களுக்கு எதிரான ஆத்திரத்தை தூண்டும் உணர்வுகளையும் கோபங்களையும்’ தவிர்த்துக் கொள்ளுமாறு முஸ்லிம்களிடம் வேணடுகோள் விடுத்திருந்தார். கடந்த காலங்களில் தனது போதனைகள் மற்றும் பிரார்த்தனைகளின் போது பலஸ்தீன மக்களின் நிலைக்காக கண்ணீர் வடித்த ஒருவரிடம் இருந்து வெளிப்பட்டுள்ள அவதானம் மிக்க மாற்றுக் கருத்தாக இது அமைந்துள்ளது.

முன்னர் ஒரு காலத்தில் சகிக்க முடியாத ஒரு விடயமாக இருந்த இஸ்ரேலை ஏற்றுக் கொள்வது பற்றிய சவூதியின் உணர்வுபூர்வமான புதிய நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலேயே அதன் பிரதான மதகுருவின் கருத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டி உள்ளது.

முஸ்லிம்களின் முதலாவது கிப்லாவான (தொழுகைக்கா நோக்கும் திசை) ஜெரூஸலத்தை உள்ளடக்கிய பலஸ்தீன விவகாரம் என்பது எல்லா மன்னர்கள், ஆட்சியாளர்கள், ஜனாதிபதிகள், மற்றும் இளவரசர்களையும் விட பிரதானமானதாகும். இது தொடர்பான இந்தப் பிராந்திய மக்களின் இதயத்துடிப்பு ஒரு அபிப்பிராய வாக்கெடுப்பின் மூலம் வெளியாகி உள்ளது. அது பலஸ்தீன மக்களோடு அளவு கடந்த அன்பையும் ஆதரவையும் மக்கள் கொண்டுள்ளார்கள் என்பதை புலப்படுத்தி நிற்கின்றது.

சவுதி அரசு அதன் குடும்ப ஆட்சி முறையைப் பொறுத்தமட்டில் உலகம் முழுவதும் முஸ்லிம்களின் வெறுப்புக்கு உள்ளான ஒரு ஆட்சியாகவே உள்ளது. பரவலான ஊழல் இஸ்லாத்துக்கு முற்றிலும் மாற்றமான அவர்களின் வாழ்வு முறை என்பனவும் இதற்கான காரணங்களாகும். இளவரசர் சல்மான் பதவிக்கு வந்தது முதல் நவ நாகரிகம் என்ற போர்வையில் இஸ்லாத்துக்கு முற்றிலும் மாறான விதத்திலேயே அவர் ஆட்சியை முன்னெடுத்துச் செல்கின்றார். இது உலக முஸ்லிம்கள்; மத்தியில் ஏற்பட்டுள்ள வெறுப்பை மேலும் அதிகரித்துள்ளது.

பெண்களை அரைகுறை ஆடையில் நடமாட அனுமதிக்கும் சுற்றுலாத் திட்டங்கள், இசை விழாக்களுக்கும் சினிமா கொட்டகைகளுக்கும் இடமளித்தல், பொலிஸ் ஆட்சி முறை, புனித நகரமான மதீனாவில் பெஷன் நிகழ்வுகளுக்கான அனுமதி, வீட்டு செல்லப் பிராணிகளாக நாய்களை வளர்க்க அனுமதி, அது சம்பந்தமான ஏனைய நிகழ்வுகளுக்கான அனுமதிகள், நவீன நிகழ்வுகள் என்ற பெயரில் இன்னும் விதவிதமான மார்க்கத்துக்கு விரோதமான செயற்பாடுகள், மனித உரிமை செயற்பாட்டாளர்களை சட்ட விரோதமாகத் தடுத்து வைத்தல், ஊடகவியலாளர்கள், சமயத் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மீது நெருக்குதல் பிரயோகம், தனது வான் பரப்புக்குள் இஸ்ரேலிய விமானங்களுக்கு அனுமதி, பலஸ்தீன விடயம், காஷ்மீர் விவகாரம், றொஹிங்யா மக்களின் பிரச்சினைகள் போன்ற உணர்வுபூர்வமான கொழுந்து விட்டெறியும் முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கண்டு கொள்ளாமல் கிடப்பில் போடுகின்றமை என்பன சவூதி அரேபிய அரசை உலக முஸ்லிம்கள் மத்தியில் தொடர்ந்து வெறுப்புக்கு ஆள்hக்கியுள்ள பிரதான காரணிகளாக இனம் காணப்பட்டுள்ளன.

பாகிஸ்தான், மலேஷியா, துருக்கி உற்பட சில முஸ்லிம் நாடுகளை உள்ளடக்கிய ஒரு புதிய கூட்டணி உருவாவதையும் சவூதி இளவரசர் சல்மான் தடுத்து நிறுத்தி உள்ளார். யெமன் மக்கள் மீது அவர் நடத்தி வரும் விமானத் தாக்குதல்கள் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களைக் காவு கொண்டுள்ளன. மேலும் அரபு உலகின் வறுமை மிக்க அந்த நாட்டையும் சின்னா பின்னப்படுத்தி உள்ளது.

இவ்வாறான ஒரு பின்னணியில் சவூதி அரேபியா இஸ்ரேலுடனான தனது உறவுகளை உத்தியோகப்பூர்வமாக ஏற்படுத்தி அந்த நாட்டை உத்தியோகப்பூhவமாகவும் ராஜதந்திர ரீதியிலும் அங்கீகரிக்குமானால் துருக்கி, ஈரான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் இணைந்து புனிதப் பள்ளிவாசல்கள் இரண்டையும் சர்வதேச மயப்படுத்துமாறு கோரிக்கையை முன் வைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்று சில புத்திஜீவிகள் சுட்டிக்காட்டி உள்ளனர். ஏற்கனவே இது போன்ற கோரிக்கைகள் சவூதி அரேபிய அரசின் விமர்சகர்களாலும், அதிருப்பதியாளர்களாலும் முன்வைக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். (முற்றும்)

Post Disclaimer

Disclaimer: இஸ்ரேலியக் கள்ளக் காதலர்களுடன் சவூதி அரேபியா அனுபவிக்கும் தேன்நிலவு : உலகளாவிய எதிர்ப்பு ஆhப்பாட்டங்களுக்கு வழியமைக்குமா? லத்தீப் பாரூக் - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect www.globalmuslimscenario.com/ point-of-view

Post Disclaimer |

IMPORTANT : All content hosted on globalmuslimscenario.com is solely for non-commercial purposes and with the permission of original copyright holders. Any other use of the hosted content, such as for financial gain, requires express approval from the copyright owners.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *