நோபல் பரிசுரைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜரார்ட் குஷ்னர் லத்தீப் பாரூக்

Spread the love

அமெரிக்காவில் மிகவும் செல்வந்த காணி அபிவிருத்தி வர்த்தகர்களில் ஒருவராக இருந்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் சிரேஷ்ட ஆலோசகராக மாறிய ஜெரார்ட் குஷ்னர் அவரின் உதவியாளராக இருந்த அவி பெர்கோவிட்ஸ் ஆகியோர் சமாதானத்துக்கான நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அரபு கொடுங்கொல் ஆட்சியாளர்களுக்கு இஸ்ரேலுடன் சமாதானம் என்ற பெயரில் உறவுகளை ஏற்படுத்த பங்களிப்புச் செய்தமைக்காக இவர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட இந்தப் புதிய சமாதான உடன்படிக்கைகள் இப்போது ‘ஆப்பிரஹாம் உடன்படிக்கைகள்’ என்று அழைக்கப்படுகின்றன.

அமெரிக்க சட்டத்தரணியும் ஹாவார்ட் சட்டக் கல்லூரியின் பேராசிரியருமான அலன் டெர்ஷோவிட்ஸ் இவர்களை சிபார்சு செய்துள்ளார். இவர் ஒரு சர்ச்சைக்குரிய பேர்வழியாவார். இவர்தான் சித்திரவதைகளை சட்டபூர்வமாக்க வேண்:டும் என்ற கருத்தை முன்னெடுத்து பிரசாரம் செய்தவர். அரபியர்களுள் பலர் சிவில் பிரஜைகளைப் போலவே இல்லை. எனவே இஸ்ரேல் அவர்களை சித்திரவதை செய்து கொல்லுவதில் எந்தத் தப்பும் இல்லை என்று பிரசாரம் செய்தவர்.

குஷ்னர் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவன்காவின் கணவராவார். இவர் முஸ்லிம்களுக்கு மிகவும் எதிரானவர். கண்மூடித்தனமாக இஸ்ரேலை ஆதரிப்பவர். ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரேன், சூடான், மொரோக்கோ ஆகிய நாடுகளை இஸ்ரேரிடம் பேச வைப்பதற்காக முக்கிய பங்களிப்புச் செய்தவர்.

இருந்தமாலும் இந்த சமாதான உடன்படிக்கைகள் முழு அளவிலான சமாதான உடன்படிக்கைகளாக அமையவில்லை காரணம் உடன்படிக்கை செய்து கொண்ட நான்கு நாடுகளில் மூன்று நாடுகள் ஏற்கனவே இஸ்ரேலுடன் இரகசிய உடன்பாடுகளைக் கொண்டவையாகும். மொரோக்கோ உடன்படிக்கை பற்றி சில வட்டவல்லுனர்கள் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர். இந்த உடன்படிக்கைக்கு மொரோக்கொவை இணங்க வைப்பதற்காக அமெரிக்கா சஹாரா பாலைவனப் பகுதியின் மேற்குப் பகுதியில் அதன் இறையான்மை கட்டுப்பாட்டை அங்கிகரித்துள்ளது. இது அமெரிக்க அரசியலில் யூத சக்திகயளின் ஆதிக்கம் செல்வாக்கு என்பனவற்றைப் புலப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. இந்த செயற்பாடுகளின் ஒரு அங்கமாக குருஷ்னர் இஸ்ரேல் பிரதமருடனான குடும்ப உறவுகளைப் பயன்படுத்திப லஸ்தீன மக்களின் பிரச்சினையை முற்றாகக் கைவிட்டுள்ளார். மத்திய கிழக்கின் ஒட்டு மொத்த பிரச்சினையே பலஸ்தீன விவகாரம் தான் என்பது இப்போது மறக்கடிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் என்பது 1947ல் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்களைக் கொலை செய்தும், பல்லாயிரக்கணக்கானவர்களை துரத்தி அடித்தும் அகதி முகாம்களுக்குள் முடக்கியும் உருவாக்கப்பட்ட ஒரு நாடாகும். இன்னும் அந்த மக்கள் மீட்சியே இல்லாத அவல வாழ்வு வாழுகின்றனர். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் இந்நிலை நீடிக்கின்றது.
மறுபுறத்தில் மத்திய கிழக்கில் கொடுங்கோல் ஆட்சியாளர்களே காணப்படுகின்றனர். முதலாம் உலகம் போரில் துருக்கி சாம்ராஜ்ஜியத்தைக் காட்டிக் கொடத்ததன் விளைவாக பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்திய சக்திகளின் கைக் கூலிகளாகப்’ பதவியில் அமர்த்தப்பட்டவர்களுட் அவர்களின் வாரிசுகளுடே இன்றை மத்திய கிழக்கின் ஆட்சியாளர்கள். அவர்கள் தொடர்ந்தும் தமது ஏகாதிபத்திய எஜமானர்களின் நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றுவதில் ஈடுபட்டு அந்தப் பிராந்தியத்தில் இரத்த ஆரை ஓட விட்டுள்ளனர்.

அவர்களய் தமது சொந்த மக்களின் ஆசைகளையோ அபிலாஷைகளையோ விருப்புக்களையோ பிரதிநிதித்துவம் செய்யவும் இல்லை பூர்த்தி செய்யவும் இல்லை. இவ்வாறுதான் இந்த நான்கு நாடுகளினதும் இஸ்ரேலுடனான சமாதான உடன்படிக்கையும் அந்த மக்களின் விருப்புக்களைப் பிரதிபலிக்கவில்லை.

பலஸ்தீனத்தை முற்றாக அழித்தொழித்து தனது பிராந்திய ஆதிக்கத்தை விஸ்தரித்து நிலைநிறுத்தும் இஸ்ரேலின் இறுதித் திட்டத்துக்கு இடமளிப்பதே குஷ்னரின் அனுகுமுறையாகும். இஸ்ரேலின் இந்த இறுதித் திட்டத்தின் மூலக் கொட்பாடே இனச் சுத்திகரிப்பும் நிறவெறிக் கோட்பாடும்; ஆகும்.

இது தொடர்பாக ஜெகோபின் சஞ்சிகையின் ஆசிரியர் பெலன் பெர்ணான்டஸ் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகையில் இஸ்ரேலினால் ஒரு ஒழுங்கான கால அட்டவணையின் கீழ் குண்டு மழை பொழியப்பட்டு வருகின்ற போது நீங்கள் சுபிட்சத்தைக் காண்பது அசாத்தியமான ஒன்று தான். அவர்களின் கொள்கைகள் குத்தியும் வெட்டியும் கொலை செய்வதும் எல்லாவகையிலும் மனித உரிமைகளை அழித்தொழிப்பதும் ஆகும். இதை சமாதானத்துக்கோ இல்லது சமாதமானப் பரிசுக்கு தடையான ஒன்றாகவோ குஷ்னரோ அல்லது டெர்ஷோவிட்ஸோ அவதானிக்கவில்லை.
சுபிட்சத்துக்கான சமாதானம் பலஸ்தீனர்களை நொக்கி நகர்த்தப்படுவத தவறி உள்ள நிலையில் அடுத்தகட்ட சிறந்த தீர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு குஷ்னர் மிகவும் ஆற்றல் மிக்க வகையில் பலஸ்தீனர்களை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளைக் கையாண்டுள்ளார். இஸ்ரேலுடன் சந்துர்ப்பவாத அரபு நாடுகளை இணங்கிச் செல்ல வைப்பதன் மூலம் தனது உள்ளக நிகழ்ச்சி நிரலில் அவர் இந்த விடயத்தை திறமையாகக் கையாண்டுள்ளார். இவை எல்லாமே இப்போது சமாதான முயங்சிகளாகப் பார்க்ககப்படுகின்றன.

சவூதி தலைமையில் யெமனை அழித்தொழிக்கும் முயற்சியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமெரிக்கத் தயாரிக்கு குண்டுகளைக் கொண்டு அபிரிமிதமான நடசத்திர பங்களிப்பினை வழைங்கி உள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முஸ்லிம்களைக் கொண்டே முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் அமெரிக்க ஐரோப்பிய மற்றும் இஸ்ரேல் நாசகார சதித் திட்டத்தின் விளைவே இதுவாகும். ஆயிரக்கணக்கான அப்பாவி யெமன் முஸ்லிம்களை சவூதியும் அமீரகமும் இணைந்து கொன்று குவித்துள்ளன. இதன் விளைவாக பண்டைய பெருமை மிக்க இந்த நாடு இன்று மரண ஓலங்கள் உலிக்கும் மயானமாhக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய பத்திரிகையான ஹாரட்ஸ் ஒரு தடைவ வெளியிட்ட தகவலில் இஸ்ரேலுக்கும் அமீரகத்துக்கும் இடையிலான உண்மையான கொடுக்கல் வாங்கலும் பேரம் பேசலும் ஆயுதங்களே என்று தெரிவித்துள்ளது. இஸ்ரேலிடம் இருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய அமீரகம் வருடாந்தம் பில்லியன் கணக்கான டொலர்களை செலவிடுகின்றது. அதற்கு பதிலாக இஸ்ரேல் தற்போது செயற்படு நிலையில் தயாராக உள்ளது.

நோபள் பரிசு அதன் பெயருக்கு தகுந்தாற் போல ஒன்றும் உன்னதமானதல்ல. எந்த உன்னதமான நிழைலயும் அற்ற கடும் போக்கு பயங்கரவாதிகளுக்கும் அது வழங்கப்பட்டுள்ளது.
உதாரணத்துக்கு மன்னாள் இஸ்ரேல் பிரதமர் மெனாச்சம் பெகின் அவர் ஒரு ரஷ்யப் பிரஜை. அங்கு அவர் ஈடபட்ட பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக சைபீரியாவுக்கு அனுப்பப்ட்டவர். அவர் சைபீரிய சிறையில் இருந்து தப்பி வந்து பலஸ்தீன பகுதிக்குள் பிரவேசித்தவர். அங்கு அவர் பிரிட்டனின் ஆதரவோடு தனது சியொனிஸ யூத பயங்கரவாத அமைப்பான இர்குன் அமைப்பை ஸ்தாபித்தார். ஜெருஸலத்துக்கு அரகில் உள்ள டெர்யாஸின் பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்கள் உற்பட hலஸ்தீனப் பகுதிகளில் அப்பாவி மக்களை கொன்று குவிப்பதில் தீவிரமாக ஈடுபட்ட அமைப்பு தான் இந்த இர்குன் அமைப்பு. டெர்யாஸினில் மட்டும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என எந்த வித்தியசமும் இன்றி 250க்கும் மேற்பட்ட அப்பாவி பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

இவர் கேம்ப்டேவிட் சமாதான உடன்படிக்கையை செய்து கொண்ட ஒரே காரணத்துக்காக சமாதானத்துக்கான நோபள் பரிசு வழங்கப்பட்டது. நோர்வேயுடன் இணைந்து செய்து கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் தான் பலஸ்தீன சுதந்திர போராட்டத்துக்கு அடியோடு முடிவு கட்டியது.

நோபள் சமாதான பரிசு வென்ற இன்னொருவரான முனடனாள் அமெரிக்க அதழபர் பராக் ஒபாமா தனது பதவிக் காலத்தின் கடைசி ஆண்டில் மட்டும் ஏழு நாடுகள் மீது 26171 சக்தி மிக்க குண்டுகளை வீசி அந்த நாடுகளை துவம்சம் செய்தவர்.

கொலம்பியாவின் முன்னாள் ஜனாதிபதி ஜுவான் மெனுவல் சன்டோஸ{ம் சமாதானத்துக்கான நோபள் பரிசை வென்றவர். இவர் கொலம்பியா இராணுவத்தால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டதை கண்டு கொள்ளாமல் விட்டவர். இவ்வாறு கால்லப்பட்ட எல்லோருக்கும் இடதுசாரி கெரில்லாக்கள் என்ற சாயம் பூசப்பட்டது.

இதே நோபள் பரிசை வென்ற மற்றொருவர் இஸ்ரேலின் ஷெமொன் பெரஸ். 1996ல் அகதி முகமுக்குள் வைத்தே 106 பலஸ்தீன அகதிகளைக் கொன்றமை தான் இவர் பற்றிய சுய விவரக் கோரவையின் இறுதிப் பந்தியாகும். அந்த 106 பேரில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் சிறுவர்கள் என்பதும் இங்கே நினைவூட்டத்தக்கது. தென் லெபனானில் உள்ள குவானா என்ற கிராமத்தில் ஐக்கிய நாடுகள் வளவு அமைந்துள்ள பகுதிக்குள்ளேயே இந்தக் கொலைகள் இடம்பெற்றமை இதில் மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய அம்சமாகும்.

குஷனரால் போஷிக்கப்பட்டவர்களுள் ஒருவர் சவூதி இளவரசர் முஹம்மத் பின் சல்மான். சவூதி அதிருப்தியாளரான ஊடகவியலாளர் ஜமால் கஷோகியை கண்டதுண்டமாக வெட்டிக் கொல்ல உத்தரவிட்டவர். தனது ஆயத பேரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த அன்றைய அமெரிக்க அரசோ அல்லது ஜனாதிபதியொ இதை கடைசி வரை கண்டு கொள்ளவே இல்லை.

இததான் இன்றைய பேரம் பேசும் கூட்டாண்மை உலகின் நிலை. இந்த கூட்டாண்மைகள் தான் அமெரிக்கா ஐரோப்பா ரஷ்யா இஸ்ரேல் என உலகம் முழுவதையும் ஆட்டிப் படைக்கின்றன.

Post Disclaimer

Disclaimer: நோபல் பரிசுரைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜரார்ட் குஷ்னர் லத்தீப் பாரூக் - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect www.globalmuslimscenario.com/ point-of-view

Post Disclaimer |

IMPORTANT : All content hosted on globalmuslimscenario.com is solely for non-commercial purposes and with the permission of original copyright holders. Any other use of the hosted content, such as for financial gain, requires express approval from the copyright owners.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *