இலங்கையில் முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டுக்கொண்டிருக்க அங்கு அ.இ.ஜ.உ தலைவர் ரிஸ்வி மௌலானா மதீனாவில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறாரா?

Spread the love

ஆயிரம் வருடத்திற்கும் மேலான வரலாற்றில் முதன்முதலாக இலங்கை முஸ்லிம் சமூகம் துன்புறுத்தலுக்குள்ளானது 2009 மே மாதம் யுத்தம் முடிவடைந்ததன் பின்னரேயாகும். தம்மை முஸ்லிம் என அழைத்துக்கொள்ளும் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் 20 ஆம் திருத்தத்திற்கு வாக்களித்து எல்லையற்ற அதிகாரங்களை ஜனதிபதிக்கு வழங்கியதைத் தொடர்ந்து இந்நிலைமை மேலும் உக்கிரமடைந்ததுள்ளது.

இது இப்படியிருக்க, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர், ரிஸ்வி முப்தி, முஸ்லிம் சமூகத்தை நாதியற்றவர்களாக்கிவிட்டு அமைதிப் பூங்காவான மதீனத்துப் புனித மண்ணில் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார்.

மத விழுமியங்கள், நேர்மை நாணயம் என எதிலும் தனது கரிசணையற்ற தன்மையை நிரூபிக்கும் வகையில் மூன்று வாரகாலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஒரு மௌலவியை நிறைவேற்றுத் தலைமைப் பொறுப்புக்கு நியமித்து விட்டு நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார் அவர்.

20 வருடங்களுக்கு முன்னர் ஒரு சர்ச்சைக்குரிய சூழலில் அ.இ.ஜ.உ தலைமைப் பதவியை பொறுப்பேற்ற நாளிலிருந்தே அனைத்தையும் தன்னைச் சுற்றி மாத்திரம் நிகழும் ஒன்றாக மாற்றி இதனை ஒரு தனிமனித ஆட்டமாக மாற்றிக்கொண்டார்.

இவரது தொடர்ந்தேர்ச்சியான முட்டாள்தனமான செயற்பாடுகளை சாதமாக்கிக் கொண்ட முஸ்லிம் எதிர்ப்பு சக்திகள் அவற்றைவைத்து மிக மோசமான பிரச்சாரங்களைக் கொண்டு செல்ல ஆரம்பித்து தனிச்சிங்கள அரசு என்ற நிலைக்கு வந்தது மட்டுமல்லாமல் முஸ்லிம்களின் வேர்களையே ஆட்டங்காணச்செய்யும் சட்டங்களை உருவாக்கி அரசியல், பொருளாதாரம், மத மற்றும் கலாசார வாழ்வு என அனைத்தையும் தாக்க ஆரம்பித்துள்ளது.

எடுத்துக்காட்டாக, கடந்த இரு தசாப்த காலமாக எரியும் பிரச்சனைகளாக இருந்து வரும் காழி நீதிமன்ற மறுசிரமைப்பு, முஸ்லிம் பெண்களின் விவாக வயதெல்லை மற்றும் மத்ரசாக்களை மறுசீரமைத்தல் போன்ற பிரச்சனைகளை தீர்த்துவைப்பதற்கு அ.இ.ஜ.உ தவறியுள்ளது. இவைகளைத் தீர்த்து வைக்க ரிஸ்வி மௌலானா செய்தது ஒன்றுமேயில்லை. விளைவு, இன்று அரசு தீர்வு தருவாகக்கூறி இவற்றில் தலையிட ஆரம்பித்துள்ளது.

12 வருடங்களுக்கு முன்னர், 2018 ஆம் ஆண்டு சலீம் மர்சூப் கமிட்டி அரசிற்கு தன் அறிக்கையை சமர்ப்பித்த போது இறையியல் மூலங்களில் இருந்து பெறப்பட்டவைகள் என்றும் எல்லாக் காலங்களுக்கும் பொருத்தமானவை என்றெல்லாம் கூறி அ.இ.ஜ.உ. அந்த சட்டங்களில் எதுவித திருத்தமும் கொண்டுவரவிடாது கடுமையாக எதிர்த்தது.

அதுமட்டுமல்லாது, அ.இ.ஜ.உ தம் தீவிர ஆதரவாளர்களை ஏவியும், பள்ளிவாயல் பிரசங்க மேடைகளைப் பயன்படுத்தியும் இவர்களுடன் உடன்படாத குழு உறுப்பினர்களை  ஏசித் தூற்றி ஏளனம் செய்யவும் ஆரம்பித்தனர். அறிக்கையில் என்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளது, அதற்கு அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நியாயங்கள்தான் என்ன என்பதைப் பற்றி எதுவித விளக்கமும் அளிக்காத அ.இ.ஜ.உ வெள்ளிக்கிழமை ஜும்ஆ மேடைகளை பயன்படுத்தி மக்களை பிழையாக இந்த மறுசீரமைப்புகளுக்கு எதிராக தூண்டிவிட்டதுடன், இவ்வாறு திருத்தங்களை செய்வது ஷரீஆவுக்கு முறணானது என்றும் கூறித்திரிந்தது.

இருப்பினும், சமூக நலன்கருதி இப்பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது கட்டாயமான ஒன்றாக இருந்தது. இஸ்லாம் பெண்களுக்கு அளித்திருந்த சலுகைகளையும் உரிமையும் முஸ்லிம் சமூகத்தின் அலட்சியத்தினால் இதுவரைக்கும் வழங்க முடியாது போய்விட்டது. முஸ்லிம் பெண்களும் இஸ்லாமிய கட்டமைப்பிற்குள் நின்று குடும்பங்கள், சமூகம், நாடு என தம் பங்களிப்புகளையும் செலுத்த வேண்டிய நேரம் இப்போது வந்துள்ளது.

அ.இ.ஜ.உ விற்கு முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதியாக இருக்கும் உரிமை வழங்கப்படவும் இல்லை. அவர்களது கனிசமாக முடிவுகள் பொதுப்புத்தியுடன் உடன்படுவதும் இல்லை.

அ.இ.ஜ.உ தன்னை ஒரு மார்க்க அறிஞர்களுக்கான அமைப்பாகவே சொல்லிக்கொள்கிறது. காலமாற்றங்களுக்கு ஏற்ப தம்மை தகவமைத்துக்கொள்ளாத மத்ரஸசாக்களில் கற்று வெளிவரும், தம்மை உலமாக்கள் என்று அழைத்துக்கொள்பவர்களில் அதிகமானவர்களால் இன்றளவில் எரியும் பிரச்சனைகள் எதற்கும் முகங்கொடுக்க முடியாது இருப்பதுவே இங்கு மிகப்பெரும் கேள்வியாக இருக்கிறது.

அ.இ.ஜ.உ உள்ள உலமாக்கள் எவரும் வாய்திறந்து எந்தக் கருத்துக்களையும் வெளியிடுவதில்லை. விரும்பத்தகாத விளைவுகளை எதிர்நோக்க வேண்டிவரும் என்ற பயமே அதற்குக் காரணம்.  தமது தொழிலை இழந்து குடும்பங்களை சிக்கலுக்குள் தள்ள அவர்கள் தயாரில்லை. அச்சுறுத்தியும், ஊக்குவிப்புகளையும் கொடுத்து அவர்களது வாய்களை அடைத்துவைத்துளனர். இதுவே அ.இ.ஜ.உ வின் தற்போதய சூழல்.  இதன் காரணமாகவே, சர்சைகளில் சிக்காத, மக்களால் பெரிதும் மதிக்கப்படும் உலமாக்களை அ.இ.ஜ.உ விற்குள் அனுப்பிவைத்து அவ்வமைப்பை மீள கட்டமைக்க வேண்டியது காலத்தின் தேவையாக காணப்படுகிறது.

முஸ்லிம்களுக்கு எதிராக தொழிற்படும் பலம்வாய்ந்த சக்திகளான இஸ்ரேல், சுவிஷேச கிறிஸ்தவர்கள், இந்தியாவின் ஆர் எஸ் எஸ் மற்றும் வீ எச் பீ போன்றன உள்நாட்டு இனவாத சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து  முஸ்லிம்களுக்கு எதிராக சூழ்ச்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கம் இத்தருணத்தில் இம்மறுசீரமைப்பு அத்தியவசியமான ஒன்றாகவும் உள்ளது.

திகன, அக்குரணைப் பிரதேச முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதல்கள் நடந்து  நான்கு நாட்கள் முடிவடைந்திருந்த நேரத்தில் ரிஸ்வி மௌலானாவினால் வழிநடாத்தப்படும் 14 சிவில் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து அப்போதய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களைச் சந்தித்தது. முஸ்லிம்களின் வீடுகள் தீக்கிரையாக்கபட்டு உடைமைகளை இழந்து மாற்றுத்துணியோ, உணவுகளோ இன்றி தவித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து முஸ்லிம் சமூகம் கொதித்துக்கொண்டிருந்த நேரம் இந்த தூதுக்குழு இது பற்றிய தமது விசனத்தை தெரிவிக்காது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன சகவாழ்வுக்கு பாடுபடுவதாகக் கூறி அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு வந்தது. இதைவிட அபத்தம் வேறு என்ன இருக்கப்போகிறது.

முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் செய்யும் அத்துரலிய ரத்ன தேரர் கண்டியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக நாடகமாடிய போது கண்டியிலும் அதனைச் சுழவுள்ள பிரதேசங்களிலும் வாழ்ந்த முஸ்லிம்கள் பயந்து வீடுகளில் ஒடுங்கிக் கிடந்த நேரம் ஜனாதிபதி சிரிசேன நடாத்திய இப்தார் நிகழ்வில் ரிஸ்வி மௌலானா போய் கலந்துகொள்கிறார்.

 

இவரது தலைமையிலான கடந்த இரண்டு தசாப்த காலத்திலும் அ.இ.ஜ.உ தோற்றுவித்த தேவையற்ற சர்ச்சைகளை சிங்கள இனவாத சக்திகள் தமக்கு சாதகமாக்கிக் கொண்டு சிங்கள மக்களை பிழையாக வழிநடத்தியதுடன் முஸ்லிம் சமூகத்துதை துன்புறுத்தும் நோக்கில் இஸ்லாத்தை  சிதைக்கவும் ஆரம்பித்தது.

 

ஹலால் சான்றிதழில் தொடங்கி, அல்குர்ஆனோ ஹதீஸோ வலியுறுத்தாத பெண்களின் சர்ர்சைக்குரிய முகம் மூடும் விடயத்தை இவர் கட்டாயம் என பிடிவாதமாக இருந்தது சமூகத்துக்கு பேரழிவுகளை கொண்டுவந்தததுடன் சமூகத்தை நகைப்புக்குள்ளாக்கியுள்ளது.

 

இவற்றையெல்லாம் சரிசெய்ய இவருக்கு 20 வருட காலம் இருந்தது. இக்கால கட்டத்தில் குறிப்பாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் முடுக்கிவிடப்பட்ட முஸ்லிம் விரேத பிரச்சாரங்களையும் இவர் முகங்கொடுக்க தவறியுள்ளதுடன் சமூகத்துக்கு பேரழிவுகளையும்  கொண்டுவந்து சேர்த்துள்ளார்.

 

ரிஸ்வி மௌலானாவின் தவறுகளின் பட்டியல் மிக நீண்டது. போதாததற்கு, இவருக்கு தெரிந்தோ தெரியாமலோ இவர் முஸ்லிம் விரோத சக்திகளால் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் நிலவுகின்றது.

இத்தனை ஆண்டுகளில், முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் வாதிகளைப் போலவே, ரிஸ்வி மௌலானாவும் முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கையை வெல்லத் தவறிட்டார்.  சமூகத்தில் இருக்கும் ஒரு சிறுபிரிவினர் இவரை சுவர்க்கம் செல்லும் நுழைவாயிலாக கருதிக் கொண்டிருக்கம் அதே நேரம் சமூகத்தின் சகல மட்டங்களிலும் இருக்கும் கனிசமான மக்கள் காலத்தின் தேவை கருதி இவர் அ.இ.ஜ.உ வில் இருந்து பதவி விலக வேண்டும் என்றே கருதுகின்றனர்.

Post Disclaimer

Disclaimer: இலங்கையில் முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டுக்கொண்டிருக்க அங்கு அ.இ.ஜ.உ தலைவர் ரிஸ்வி மௌலானா மதீனாவில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறாரா? - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect www.globalmuslimscenario.com/ point-of-view

Post Disclaimer |

IMPORTANT : All content hosted on globalmuslimscenario.com is solely for non-commercial purposes and with the permission of original copyright holders. Any other use of the hosted content, such as for financial gain, requires express approval from the copyright owners.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *